பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 769 

   கொண்டு, 'அநங்கன் அன்னான் வேந்து விளங்கிழை யென்ற இவர்கள் நாளும் ஆராய்ந்து தன்னைப் பரவுதலாலே, தான் அரிவை யடியிலே தங்கா நிற்கும்' என்று பொருள் கூறுவர் நச்சினார்க்கினியர். இவ்வாறு கூறுதற்குப், 'பதுமையையும் பரத்தையையும் ஒக்கக் கூறலாகாமை உணர்க' என்று காரணமுங் காட்டுவர்.

( 193 )
1359 இங்ஙன மிரண்டு திங்க ளேகலு மேக வேலா
னங்ஙனம் புணர்ந்த வன்பி னவண்முலைப் போக நீக்கி
யெங்ஙன மெழுந்த துள்ள மிருளிடை யேக லுற்றான்
றங்கிய பொறியி னாக்கந் தனக்கொர்தே ராக நின்றான்.

   (இ - ள்.) இங்ஙனம் இரண்டு திங்கள் ஏகலும் - இவ்வாறு இரண்டு திங்கள் கழிந்தவுடன்; ஏக வேலான் - தனி வேலானும்; தங்கிய பொறியின் ஆக்கம் தனக்கு ஒர் தேராக நின்றான் - நிலை பெற்ற நல்வினையின் ஆக்கத்தைத் தனக்கு ஒரு தேராகக் கொண்டு நின்றவனுமாகிய சீவகன்; அங்ஙனம் புணர்ந்த அன்பின் அவள் - அவ்வாறு உழுவலான் வந்த அன்பினையுடையவளின்; முலைப் போகம் நீக்கி - முலையின்பத்தை விட்டு; இருளிடை ஏகல் உற்றான் - இருளிலே செல்லத் தொடங்கினான்; எங்ஙனம் எழுந்தது உள்ளம்? - எவ்வாறு உள்ளம் அதற்கு எழுந்ததோ?

 

   (வி - ம்.) கொண்டு போதலின் நல்வினை தேர் ஆயிற்று; பிரிவிற்கு நூலாசிரியர் வருந்தினர்.

( 194 )
1360 தயங்கிணர்க் கோதை தன்மேற்
  றண்ணென வைத்த மென்றோள்
வயங்கிணர் மலிந்த தாரான்
  வருந்துறா வகையி னீக்கி
நயங்கிள ருடம்பு நீங்கி
  நல்லுயிர் போவ தேபோ
லியங்கிடை யறுத்த கங்கு
  லிருளிடை யேகி னானே.

   (இ - ள்.) வயங்கு இணர் மலிந்த தாரான் - விளங்கும் பூங்கொத்துக்கள் நிறைந்த மலர்த்தாரினான்; தயங்கு இணர்க்கோதை - விளங்கும் இணரையுடைய கோதையளான பதுமை; தன்மேல் தண் என வைத்த மென் தோள் - தன்மேல் குளிர்ச்சியாக வைத்திருந்த கையை; வருந்துறா வகையின் நீக்கி - வருந்தா வண்ணம் எடுத்து வைத்துவிட்டு; நயம் கிளர் உடம்பு நீங்கி - விருப்பம் பொருந்திய உடம்பை விட்டு; நல் உயிர் போவதே போல் - நல்ல உயிர் செல்வதைப் போல; இயங்கு இடை அறுத்த