பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 771 

1363 புல்லும் போழ்தினும் பூணுறி னோமென
மல்லற் காளையை வைது மிழற்றுவா
யில்லி னீக்க முரைத்திலை நீயெனச்
செல்வப் பைங்கிளி தன்னையுஞ் சீறினாள்.

   (இ - ள்.) புல்லும் போழ்தினும் பூண் உறின் நோம் என - சீவகன் என்னைத் தழுவும் போதும் அணிகலன் உறின் வருந்தும் என்று; மல்லல் காளையை வைது மிழற்றுவாய் - வளமுறு காளையன்னானை வைது என் மென்மையை மிழற்றினையே; நீ இல்லின் நீக்கம் உரைத்திலை என - நீ அவன் இந்த மனையினின்றும் நீங்கிப் போதலை உரைத்திலையே என்று; செல்வப்பைங்கிளி தன்னையும் சீறினாள் - தன் காதற் கிளியையும் சீறினாள்.

 

   (வி - ம்.) பூண் உறின் - முயக்கம் இறுகின் என்றுமாம்.

 

   சீவகன் என்னைப் புல்லும் போழ்தினும் என்க. பூண் - அணிகலன். மல்லல் - ஈண்டு ஆண்மைப் பண்புகளின் மிகுதி. இல்லினின்றும் நீங்கிய நீக்கம் என்க.

( 198 )
1364 ஓவி யக்கொடி யொப்பருந் தன்மையெம்
பாவை பேதுறப் பாயிலி னீங்கிநீ
போவ தோபொரு ளென்றிலை நீயெனப்
பூவை யோடும் புலம்பி மிழற்றினாள்.

   (இ - ள்.) ஓவியக் கொடி ஒப்பு அருந் தன்மை - ஓவியத்தில் எழுதிய பூங்கொடி உவமை யாகாத் தன்மையுடைய; எம் பாவை பேதுற - எங்கள் பாவையாள் வருந்தும்படி; நீ பாயலின் நீங்கிப் போவதோ பொருள்? - நீ பாயலினின்றும் பிரிந்து போவதோ செய்யத் தகுவது?; என்றிலை நீ - என்று கூறிலை நீ; என - என்றுரைத்து; பூவையோடும் புலம்பி மிழற்றினாள் - பூவையுடன் வருந்திக் கூறினாள்.

 

   (வி - ம்.) பாவை யென்றது, பட்டாங்கு கூறுதற்கண் வந்தது; 'அம்பலம் போற் - கோலத்தினாள் பொருட்டாக' (சிற் - 27) என்றாற் போல. பாயலின் நின்றும் என்பதோர் இடைச்சொல் ஐந்தாவதற்கு விரிக்க.

( 199 )
1365 தன்னொப் பாரையில் லானைத் தலைச்சென்றெம்
பொன்னொப் பாளொடும் போகெனப் போகடாய்
துன்னித் தந்திலை நீயெனத் தூச்சிறை
யன்னப் பேடையொ டாற்றக் கழறினாள்.