| பதுமையார் இலம்பகம் | 
775  | 
  | 
| 
 கொள் பேரணி முற்றிழை சிந்தினாள் - தன் முலைகளிற் கொண்ட பெரிய அணிகளை முற்றிழையுடையாள் சிந்தினாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) வேலவன் : சீவகன். கூடலன் : முற்றெச்சம். இப்பூண் எனச் சுட்டுச்சொல் வருவித்தோதுக. மலை - ஈண்டுப் பொதியின்மலை. முற்றிழை : அன்மொழித் தொகை; ஈண்டுப் பதுமை. 
 | 
( 206 ) | 
|  1372 | 
அருங்க லக்கொடி யன்னவ னேகினா |  
|   | 
னிருந்திவ் வாகத் தெவன்செய்விர் நீரெனா |  
|   | 
மருங்கு னோவ வளர்ந்த வனமுலைக் |  
|   | 
கருங்கண் சேந்து கலங்க வதுக்கினாள். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அருங்கலம் கொடி அன்னவன் ஏகினான் - நுமக்கு அருங்கலத்தையும் எழுது கொடியையும் போன்று நீங்காதவன் சென்று விட்டான்; நீர் இவ் ஆகத்து இருந்து எவன் செய்விர் எனா - இனி நீவிர் இம் மார்பிலே இருந்து என்ன செய்வீர் என்று; மருங்குல் நோவ வளர்ந்த வன முலைக் கருங்கண் சேந்து கலங்க அதுக்கினாள் - இடை வருந்த வளர்ந்த அழகிய முலையிற் கரிய கண் சிவந்து கலங்கும்படி அடித்துக்கொண்டாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) அருங்கலக் கொடி : அதுக்கினாள் என்றுமாம். அதற்கு அன்னவன் என்பதைச் சுட்டாக்குக. 
 | 
  | 
| 
    அருங்கலம் - பெறலரிய அணிகலன். கலமும் கொடியும் அன்னவன் என உம்மை விரித்தோதுக. கொடி - ஈண்டு முலைமேல் எழுதும் தொய்யிற் கொடி. ஆகம் - மார்பு இருந்து எவன் செய்வீர் என்றது நும்மால் இனிப் பயனில்லை என்றவாறு. 
 | 
( 207 ) | 
|  1373 | 
மஞ்சு சூழ்வரை மார்பனைக் காணிய |  
|   | 
துஞ்ச லோம்புமி னெனவுந் துஞ்சினீ |  
|   | 
ரஞ்ச னத்தொடு மையணி மின்னென |  
|   | 
நெஞ்சி னீணெடுங் கண்மலர் சீறினாள். | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மஞ்சு சூழ் வரை மார்பனைக் காணிய - முகில் உலவும் மலையனைய மார்பனைக் காண்பதற்கு; துஞ்சல் ஓம்புமின் என்னவும் துஞ்சினீர் - துயில்வதை நீக்குமின் என்றுரைக்கவும் துயின்றீர்கள்; அஞ்சனத்தொடு மை அணிமின் என - (இனி) அஞ்சனத்தையும் மையையும் அணிந்து கொள்ளுமின் என்று; நீள் நெடுங் கண்மலர் நெஞ்சின் சீறினாள் - நீண்ட கண் மலர்களை நெஞ்சினாலே சீறினாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) அணிமின் : அணியாதீர் என்னுங் குறிப்பு. பின்னும் அவை காட்ட வேண்டுதலின் அவை கேளாமற் சீறினாள். 
 | 
( 208 ) |