பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 777 

விளங்கும் செய்குன்றே!; புனலே! - நீர் நிலையே!; வழையே! - சுர புன்னையே!; தழையே! - தழையே!; விரை ஆர் பொழிலே! - மணம்நிறை மலர்க் காவே!; விரி வெண்ணிலவே! - மலர்ந்த வெண் திங்களே!; உயிர் காவலன் உள் வழி உரையீர் - என் உயிர் முதல்வன் இருக்கும் இடத்தை உரைப்பீராக!

 

   (வி - ம்.) நிரைவீழ் அருவி - வரிசையாக வீழ்கின்ற அருவி. செய்குன்றாகலின் நிரைவீழ் அருவி என்றார். நிமிர்பொன் - உயர்ந்த பொன். பொன்சொரிதல் - பொன்னொளி வீசுதல். வழை - சுரபுன்னை. விரை - மணம். காவலன் : சீவகன்.

( 211 )
1377 எரிபொன் னுலகின் னுறைவீ ர்தனைத்
தெரிவீர் தெரிவில் சிறுமா னிடார்ற்
பரிவொன் றிலிராற் படர்நோய் மிகுமா
லரிதா லுயிர்காப் பமரீ ரருளீர்.

   (இ - ள்.) எரி பொன் உலகின் உறைவீர்! - ஒளிரும் பொன் உலகிலே வாழ்வீர்!; இதனைத் தெரிவீர் - (ஆதலின்) என் காதலன் போன வழியை அறிந்திருப்பீர்; தெரிவு இல் சிறு மானிடரின் பரிவு ஒன்றிலிர் - (தெரிந்திருப்பவும்) தெரியாத சிறு மனிதரைப்போல அருளிலிரா யிராநின்றீர்; படர்நோய் மிகும் - துன்ப நோய் மிகும்; உயிர் காப்பு அரிது - (அதனால்) உயிர்காத்தல் இனி அரிது; அமரீர்! - வானவரே!; அருளீர் - உயிரைக் காக்க அவனை அருள்வீராக.

 

   (வி - ம்.) பொன்னுலகின் னுறைவீர் என்றது இதனைத் தெரிவீர் என்றதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. தேவர் உலகினிகழ்ச்சிகள் எல்லாம் இருந்தவிடத்திருந்தே உணரவல்லார் ஆகலின் இங்ஙனம் கூறினள். தெரிவில் மானிடர் என்பது நும்போன்ற அறியமாட்டாத இயல்புடைய மானிடர் என்றவாறு. படர் - துன்பம் அமரீர் : அமரர் என்பது விளியுருபேற்று நின்றது.

( 212 )
1378 புணார்வின் னினிய புலவிப் பொழுதுங்
கணவன் னகலின் னுயிர்கை யகற
லுணார்வீ ரமரார் மகளீ ரருளிக்
கொணார்வீர் கொடியே னுயிரைக் கொணார்வீர்.

   (இ - ள்.) அமரர் மகளீர்! - வானவர் மகளிரே!; புணர்வின் இனிய புலவிப் பொழுதும் - கூட்டத்தினும் இனிமையையுடைய புலவிக் காலத்தும்; கணவன் அகலின் உயிர் கையகல்தல் உணர்வீர் - கணவன் தழுவுதல் நீங்கின் உயிர் நீங்குதலை அறிவீராகலின்; கொடியேன் உயிரை அருளிக் கொணர்வீர்! கொணர்வீர் - கொடியவளாகிய என் உயிரை அருள் செய்து கொண்டு தருவீர்! கொண்டுதருவீர்!