| பதுமையார் இலம்பகம் | 
779  | 
  | 
|  1381 | 
அருடோ் வழிநின் றறனே மொழிவாய் |  
|   | 
பொருடோ் புலனெய் தியபூங் கழலா |  
|   | 
யிருடோ் வழிநின் றினைவேற் கருளா |  
|   | 
யுருடே ருயர்கொற் றவன்மைத் துனனே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) பொருள் தேர் புலன் எய்திய பூங்கழலாய் - பொருளைத் தேடும் அறிவிலே சென்ற பூங்கழ லணிந்தவனே!; உருள் தேர் உயர் கொற்றவன் மைத்துனனே! - ஆழிபூண்ட தேரையுடைய மேம்பட்ட அரசன் உலோகமாபாலனின் மைத்துனனே!; அருள் தேர் வழிநின்று அறனே மொழிவாய் - அருளை ஆராயும் வழியிலே நின்று அறமே கூறுவாய்; (எனினும்); இருள் தேர் வழி நின்று இனைவேற்கு அருளாய் - இருள் நிறைந்த இடத்தே நின்று வருந்தும் எனக்கு அருள்கின்றிலை. 
 | 
  | 
| 
    (வி - ம்.) நினக்குச் சொல்லும் எளிது, சொல்லிய வண்ணஞ் செய்தல் அரிதாக இருந்தது என்று கூறுகிறாள். 
 | 
  | 
| 
    கொற்றவனும் மைத்துனனும் என உம்மைத் தொகையாக்கியும் 'எய்திய' என்பதை வினையெச்சமாக்கியும் சொற்களைப் பல விடங்களினின்றும் பிரித்துக் கூட்டி நச்சினார்க்கினியர் கூறும் பொருள் : 
 | 
  | 
| 
    கழலாய்! தனபதியும், உலோக பாலனும் நின்னுடன் அருள் இருக்கும்படியை ஆராயுமிடத்து, அவர்கள் தத்துவத்தை ஆராயும் அறிவைப் பெறவேண்டி நின்று, அவர்கட்கு அறனே மொழிகின்ற நீ, இருள் செறிந் இடத்திலே நின்று வருந்துகின்ற எனக்கு அருளுகின்றிலை. ஆதலால், நினக்கு முற்படச் சொல்லுதல் எளிதாய்ச் சொல்லிய வண்ணஞ் செய்தல் அரிதாய் இருந்தது என்றாள். 
 | 
  | 
| 
    இவ்வாறு மாட்டேற்றுப் பொருள் கூறினும் கருத்து வேறுபாடில்லையாதல் காண்க. 
 | 
( 216 ) | 
|  1382 | 
மிகவா யதொர்மீ ளிமைசெய் தனனோ |  
|   | 
வுகவா வுனதுள் ளமுவர்த் ததுவோ |  
|   | 
விகவா விடரென் வயினீத் திடநீ |  
|   | 
தகவா தகவல் லதுசெய் தனையே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) தகவா! - தக்கோனே!; இகவா இடர் என் வயின் நீ ஈத்திட - நீங்காத இடரை என்னிடத்தே நீ கொடுத்திடற்கு; மிக ஆயதொர் மீளிமை செய்தனனோ? யான்தான் அறிவின்மையான் மிகையாயதொரு வன்மை செய்தேனோ?; உனது உள்ளம் உகவா உவர்த்ததுவோ? - உன் மனந்தான் ஒரு கால் அன்பு மிக்குப் பின்பு வெறுத்ததோ?; தகவு அல்லது செய்தனையே - தகுதியல்லாத காரியத்தைச் செய்தனையே! 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'தகவா' என்பதற்குத் 'தகும்படி வந்து முயங்குவாயாக' என்றும் பொருள் உரைப்பர் நச்சினார்க்கினியர். 'யான் வன்மை செய் 
 | 
  |