| பதுமையார் இலம்பகம் | 
780  | 
  | 
| 
    தேனோ? நின் உள்ளந்தான் உவர்த்ததோ?' என்று உருவெளியை நோக்கி உரைத்தாளாக, அது மாற்றந் தராததால் மேலும் அதனை நோக்கித் தகவல்லது செய்தனை என்றாள். 
 | 
( 217 ) | 
|  1383 | 
குளிர்துன் னியபொன் னிலமே குதலாற் |  
|   | 
றளரன் னநடை யவடாங் கலளா |  
|   | 
யொளிர்பொன் னரிமா லையொசிந் திஙனே |  
|   | 
மிளிர்மின் னெனமின் னிலமெய் தினளே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) ஒளிர் பொன் அரி மாலை - விளங்கும் பொன்னரி மாலை போன்றவள்; குளிர் துன்னிய பொன் நிலம் ஏகுதலால் - குளிர்ச்சி பொருந்திய பொன் நிலத்தே உலாவுதலால்; தளர் அன்ன நடையவள் தாங்கலளாய் - தளர்ந்த அன்னம்போலும் நடையையும் பொறதவளாய்; ஒசிந்து இஙனே மிளிர் மின் என மின் நிலம் எய்தினள் - துவண்டு இந்நிலத்தே பிறழும் மின் என ஒளிரும் நிலத்தே விழுந்தாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'மீநிலம்' என்றும் பாடம். 'தக வா' எனப் பிரித்துத் 'தகவுற வந்து முயங்கு' என முற்செய்யுளிற் பொருள் கூறிய நச்சினார்க்கினியர் இச் செய்யுளிலும் அதற்கேற்ப, 'அவ்வுருவம் வந்து முயங்காது நிற்றலின் தன் மேனியிற் காமத் தீயாறிக் குளிர்ச்சி நெருங்க வேண்டி முயங்குதற்குப் பொன்னிலத்தே அவள்தான் சேறலின், அப்பொழுது அவசத்தாலே தளர்ந்த அன்னம்போலு நடையைத் தாங்கமாட்டாதவளாய், ஒசிந்து இந்நிலத்தே பிறழும் மின்னென நிலத்தே வீழ்ந்தான்' என்றுரைப்பர். 
 | 
( 218 ) | 
|  1384 | 
தழுமா வலிமைந் தவெனத் தளரா |  
|   | 
வெழுமே ழடியூக் கிநடந் துசெலா |  
|   | 
விழுமீ நிலமெய் திமிளிர்ந் துருகா |  
|   | 
வழுமா லவலித் தவணங் கிழையே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) அ அணங்கு இழை - அந்த அழகிய அணியணிந்த பதுமை; அவலித்து - வருந்தி; தளரா எழும் - தளர்ந்து எழுவாள்; ஏழடி ஊக்கி நடந்து செலா - ஏழடி வரை முயற்சித்து நடந்து சென்று; மா வலி மைந்த எனத் தழும் - மாவலியுடைய மைந்தனே! என்று (உருவெளியைத்) தழுவுவாள்; விழும் - (அவ்வுருவம் கைக்குப் பற்ற வியலாமையின்) விழுவாள்; மீநிலம் எய்தி மிளிர்ந்து உருகா அழும் - (விழுந்து) மேலாம் நிலத்தை அடைந்து புரண்டு உருகி அழுவாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) தளரா, உருகா, செலா : செய்யா என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள். ஏழடி செல்வது மரபு. தழும், எழும், விழும், அழும் என்பன செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றுக்கள். 
 | 
( 219 ) |