பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 782 

உருகுகின்ற அக்காலத்தே; கெழீஇயினாள் - நெருங்கியவளாகய; கேள்வி நல்யாழ்க் கிளை நரம்பு அனைய சொல்லாள் தோழி துன்னி - கேள்விக்குரிய நல்ல யாழின் கிளையென்னும் நரம்பினது இசையைப் போன்ற சொல்லாளாகிய தோழி ஆங்குவந்து; கழி பெருங் கவலை நீங்க - மிகப் பெருங் கவலை தவிர; காரண நீர சொன்னாள் - காரணமான தன்மையை உடைய சொற்களைக் கூறினாள்.

 

   (வி - ம்.) ஆங்கும் : உம் : இசை நிறை. காமமும், இருவினையும், நிலையாமையும் முதலியவற்றைக், 'காரண நீர' என்றார். பிரிவுணர்த்தி ஆற்றுவித்துச்சீவகன் பிரியாமையின் தோழி ஆற்றுவிக்கின்றாள்.

( 221 )
1387 தௌ்ளறல் யாறு பாய்ந்த திரைதவழ் கடலின் வெஃகி.
யள்ளுற வளிந்த காம மகமுறப் பிணித்த தேனு
முள்ளுற வெந்த செம்பொ னுற்றநீர்ப் புள்ளி யற்றாற்
கள்ளுற மலர்ந்த கோதாய் காதலர் காத லென்றாள்.

   (இ - ள்.) கள் உற மலர்ந்த கோதாய் - தேன் பொருந்த மலர்ந்த மாலையாய்!; தௌ் அறல் யாறு பாய்ந்த திரை தவழ் கடலின் வெஃகி - தெளிந்த நீரையுடைய ஆறுகள் பாய்ந்த அலை தவழும் கடலினும் மிகுந்து; அள் உற அளிந்த காமம் அகம் உறப் பிணித்த தேனும் - நுகரும் தன்மை உறும்படி பழுத்த காமம் உள்ளம் இறுகப் பிணித்த தாயினும்; காதலர் காதல் - காதலித்தோர் காதல்; உள்உற வெந்த செம்பொன் உற்ற நீர்ப் புள்ளி அற்று - உள்ளத்தே அடங்கிப் பிறர்க்குத் தோன்றாதிருக்க வேண்டின் வெந்த செம்பொன்னிற் பொருந்திய நீர்த்துளி போலத் தோன்றாது.

 

   (வி - ம்.) அற்று : குறிப்பு வினைமுற்று.

 

   வெஃகி - ஆசை மிகுந்து. கையால் அள்ளிக்கொள்ளலாம்படி கனிந்த காமம் எனினுமாம் அகம் - நெஞ்சம். உள்ளுறவேண்டின் என்க; நெஞ்சத்துள்ளேயே பொருந்திப் புறத்தார்க்குப் புலப்படாதிருக்க விரும்பின் என்பது கருத்து கள் - தேன்.

( 222 )
1388 ஓடரி யொழுகி நீண்ட
  வொளிமலர் நெடுங்க ணாரைக்
கூடரி யுழுவை போல
  முயக்கிடைக் குழையப் புல்லி
யாடவ ரழுந்தி வீழ்ந்தும்
  பிரிவிடை யழுங்கல் செல்லார்
பீடழிந் துருகும் பெண்ணிற்
  பேதைய ரில்லை யென்றாள்.

   (இ - ள்.) ஓடு அரி ஒழுகி நீண்ட ஒளிமலர் நெடுங்கண்ணாரை - ஓடுகின்ற செவ்வரியுடன் மிகவும் நீண்ட ஒளி பொருந்திய மலரனைய நீண்ட கண்ணாரை; கூடு அரி உழுவை போல ஆடவர் முயக்கிடைக் குழையப் புல்லி - தம் தம் பெடையுடன்