| பதுமையார் இலம்பகம் |
783 |
|
|
கூடும் சிங்கமும் புலியும் போல ஆடவர் கூடற் காலத்தே குழையு மாறு தழுவி; அழுந்தி வீழ்ந்ததும் - இன்பத்தில் அழுந்தி வீழ்ந்தாலும்; பிரிவிடை அழுங்கல் செல்லார் - பிரிவுக் காலத்து வருந்த மாட்டார்; பீடு அழிந்து உருகும் பெண்ணின் பேதையர் இல்லை என்றாள் - (அங்ஙனமின்றிப்) பிரிவிடத்துப் பெருமை கெட்டு உருகும் பெண்களைக் காட்டினும் பேதையர் இவ்வுலகத்தில் இல்லை என்று தோழி கூறினாள்.
|
|
|
(வி - ம்.) ஆடவர் நுகர்ச்சிக்காலத்தே மகளிரினும் மிக்கு இன்பத்திலழுந்துகின்றார், பிரிவிடை வருந்துகின்றிலர்; மகளிரோ பிரிவுக் காலத்தே துன்பத்திற் பெரிதும் அழுந்துகின்றனர். ஆதலின் மகளிரிற் காட்டிற் பேதையரில்லை என்றவாறு.
|
( 223 ) |
| 1389 |
பேதைமை யென்னும் வித்திற் |
| |
பிறந்துபின் வினைக ளென்னும் |
| |
வேதனை மரங்க ணாறி |
| |
வேட்கைவோ் வீழ்த்து முற்றிக் |
| |
காதலுங் களிப்பு மென்னுங் |
| |
கவடுவிட் டவலம் பூத்து |
| |
மாதுய ரிடும்பை காய்த்து |
| |
மரணமே கனிந்து நிற்கும். |
|
|
(இ - ள்.) பேதைமை யென்னும் வித்தில் - அறியாமையென்னும் வித்தினிடமாக; வினைகள் என்னும் வேதனை மரங்கள் பிறந்து பின் நாறி - தீவினைகள் என்கிற துன்பந்தரும் மரங்கள் முளைத்துப் பின் வளர்ந்து; வேட்கை வேர் வீழ்த்து முற்றி - ஆசையாகிய வேரை வீழ இறக்கி முதிர்ந்து; காதலும் களிப்பும் என்னும் கவடு விட்டு - காதல் களிப்பு என்னும் கிளைகளை விட்டு; அவலம் பூத்து - வருத்தம் மலர்ந்து; மாதுயர் இடும்பை காய்த்து - பெருந்துயரந்தரும் கவலை காய்த்து; மரணமே கனிந்து நிற்கும் - மரணந் தருகின்ற கையாற்றை இவ்வுடம்பு நுகரப் பழுத்துத் தந்து, பின்னும் அவ்வாறு காய்க்க அம் மரம் நிற்கும்.
|
|
|
(வி - ம்.) பழுத்தல் - உடம்பு போதல். தீவினை நிற்றலின் நிற்கும் என்றார். மரணமே: ஏ: தேற்றம். பெறாததன்மேற் செல்வது காதல். பெற்றதன்மேற் செல்வது களிப்பு.
|
|
|
வேதனை மரங்கள் பிறந்துபின் நாறி என மாறுக பிறந்து என்றது முறைத்து என்றவாறு. நாறுதல் - தோன்றுதல்; ஈண்டு வளர்ந்து என்னும் பொருள்பட நின்றது. வேதனைமரம் : பண்புத்தொகை. கவடு - கிளை. அவலம் - துன்பம். மாதுயர் இடும்பை : இருபெயரொட்டு; மிகப்பெருந் துன்பம் என்பது கருத்து.
|
( 224 ) |