பக்கம் எண் :

பதுமையார் இலம்பகம் 786 

   யார்க்குத் துன்பம் வீடுபேற்றிற்குக் காரணமாதல் பற்றி இத்துன்பமே நமக்கின்பம் என்று அவலியாதிருத்தல் கூடும் ஆயின் அங்ஙனம் இருத்தல் செயற்கரிய செயலென்பாள் 'துகைத்த அத்துன்பந்தாங்கி இன்பம் என்றிருத்தல் போலும் அரியது இவ்வுலகில்' என்றாள்.

( 227 )
1393 மயற்கையிம் மக்கள் யோனிப்
  பிறத்தலும் பிறந்து வந்தீங்
கியற்கையே பிரிவு சாத
  லிமைப்பிடைப் படாத தொன்றாற்
கயற்கணி னளவுங் கொள்ளார்
  கவற்சியுட் கவற்சி கொண்டார்
செயற்கையம் பிறவி நச்சுக்
  கடலகத் தழுந்து கின்றார்.

   (இ - ள்.) மயற்கை இம் மக்கள் யோனிப் பிறத்தலும் - குற்றமுடைய இம் மக்கட் பிறப்பிற் பிறத்தலும்; பிறந்து வந்து ஈங்குப் பிரிவு சாதல் இயற்கை - பிறந்து வந்து இவ்வுலகிற் பிரிதலும் இறத்தலும் இயற்கை; இமைப்பிடைப் படாதது ஒன்றால் - இமைப்பளவும் நடுவில் தங்காதது ஒன்று, ஆதலால்; கவற்சி கயற்கணின் அளவும் கொள்ளார் - அறிஞர் கவலை மீன்கண்ணளவாயினும் கொள்ளார்; உள் கவற்சி கொண்டார் செயற்கை அம்பிறவி நச்சுக் கடலகத்து அழுந்துகின்றார் - மனக்கவலை கொண்டவர்கள் பற்றுள்ளத்தால் உண்டாகும் பிறவியாகிய நச்சுக் கடலிலே அழுந்துகின்றவர்கள்.

 

   (வி - ம்.) (பலபிறப்பிலும்) பிறந்து வந்து இம்மக்கள் யோனியிற் பிறத்தலும் மயற்கை என்பர் நச்சினார்க்கினயர். கயற்கணின் அளவு : அளவின் சிறுமை குறிப்பது; ஒரு மாத்திரையளவு.

( 228 )
1394 இளமையின் மூப்புஞ் செல்வத்
  திடும்பையும் புணர்ச்சிப் போழ்திற்
கிளைநரிற் பிரிவு நோயில்
   காலத்து நோயு நோக்கி
விளைமதுக் கமழுங் கோதை
   வேலினும் வெய்ய கண்ணாய்
களைதுய ரவலம் வேண்டா
  கண்ணிமைப் பளவு மென்றாள்

   (இ - ள்.) இளமையில் மூப்பும் - இளமைக் காலத்தே மூப்பு வருமென்பதையும்; செல்வத்து இடும்பையும் - செல்வமுள்ள போதே வறுமைத் துன்பம் வருமென்பதையும்; கிளைநரில்