| பதுமையார் இலம்பகம் |
788 |
|
| 1396 |
வடிமலர்க் காவி னன்று |
| |
வண்டளிர்ப் பிண்டி நீழன் |
| |
முடிபொருள் பறவை கூற |
| |
முற்றிழை நின்னை நோக்கிக் |
| |
கடியதோர் கௌவை செய்யுங் |
| |
கட்டெயிற் றரவி னென்றேன் |
| |
கொடியனாய் பிழைப்புக் கூறேன் |
| |
குழையலென் றெடுத்துக் கொண்டாள். |
|
|
(இ - ள்.) முற்றிழை! - முற்றிய இழைகளையுடையாய்!; அன்று வடிமலர்க் காவின் வண்தளிர்ப் பிண்டி நீழல் - அன்றைக்கு ஆராயும் மலர்ப் பொழிலிலே வளவிய தளிரையுடைய பிண்டியின் நீழலிலே; பறவை முடிபொருள் கூற - அப்பறவை முடியும் பொருளைக் கூறுதலின்; நின்னை நோக்கிக் கட்டு எயிற்று அரவின் கடியது ஓர் கௌவை செய்யும் என்றேன் - உன்னைப் பார்த்து இக் கூற்றுக் கட்டிய நஞ்சுடைய அரவினாலே கொடியதாகிய ஒரு துன்பத்தை உண்டாக்குவதைக் காட்டும் என்றேன்; கொடியனாய்! - கொடி போன்றவளே!; பிழைப்புக் கூறேன் - தவறுரையேன்; குழையல் என்று எடுத்துக்கொண்டாள் - வருந்தற்க என்று தழுவியெடுத்துக் கொண்டாள்.
|
|
|
(வி - ம்.) வடிமலர்க்கா : வினைத்தொகை; தழைத்துத் தாழ்ந்த காவுமாம். பிண்டி - அசோகமரம். 'பறவை முடிபொருள் கூறக் கடியதோர் கௌவை செய்யும் என்றேன்' என்றது மேலைச் செய்யுளில் தாரினான் கைப்படும் என்றதற்கு எடுத்துக்காட்டு.
|
( 231 ) |
| 1397 |
அலங்கலுங் குழலுந் தோழி |
| |
யங்கையி னடைச்சி யம்பூம் |
| |
பொலங்கலக் கொடிய னாடன் |
| |
கண்பொழி கலுழி யொற்றிக் |
| |
கலந்தகி னாறு மல்குற் |
| |
கவான்மிசைக் கொண்டி ருந்தாள் |
| |
புலர்ந்தது பொழுது நல்லா |
| |
ணெஞ்சமும் புலர்ந்த தன்றே. |
|
|
(இ - ள்.) தோழி - தோழியானவள்; அம் கையின் - அழகிய தன் கையினால்; அம் பொலம் கலம் பூங்கொடியன்னாள் தன் - அழகிய பொன்னாலாகிய கலம் அணிந்த பூங்கொடி போன்றவளின்; அலங்கலும் குழலும் அடைச்சி - மாலையையும் குழலையும் செருகி; கண்பொழி கலுழி ஒற்றி - கண்ணிலிருந்து வடியும்
|
|