| கேமசரியார் இலம்பகம் | 
799  | 
  | 
| 
 படுதலின் இறுமளவும் பிறழ்தலில்லாக் கற்பினையுடையோர் என்பார் நாணிற் றீராக் கற்பின்னவர் என்றார். முலைக் கண்களின் எழிலைக் கூர்ந்து நோக்கித் தன்னுள்ளக் கிழியின் எழுதிப் பின் முயங்குபவன் என்றவாறு. இதனால் காட்சியின்பமும் உற்றின்பமும் ஒருங்கே கூறப்பட்டன. முள்குதல் - முயங்குதல். மலையும் கானமு முதலியவற்றின் எழில் கண்டு மகிழ்வதென் நோக்கம் என்று சீவகன் சுதஞ்சணனுக்குக் கூறியதற்கிணங்க (1175) ஈண்டு மகிழ்வோடேகுகின்றான் என்ற நயம் உணர்ந்து மகிழ்க. 
 | 
  | 
| 
    இச் செய்யுளும் நூலாசிரியரின் இரக்கத்தைக் காட்டுகின்றது. 
 | 
( 2 ) | 
|  1414 | 
கனிகொள் வாழைக் காட்டுட் |  
|   | 
  கருமை மெழுகி யவைபோன் |  
|   | 
றினிய வல்லா முகத்த |  
|   | 
  முசுவுங் குரங்கு மிரியத் |  
|   | 
துனிவு தீர நோக்கித் |  
|   | 
  தோன்றல் செல்லு முன்னாற் |  
|   | 
பனிவெண் டிரைசூழ் கடல்போற் |  
|   | 
  பழுவந் தோன்றிற் றவணே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கனிகொள் வாழைக்காட்டுள் - பழமுடைய வாழைக்காட்டிலே; கரு மை மெழுகியவைபோன்று இனிய அல்லா முகத்த - கரிய மையை மெழுகிவைத்தவை போலும் அழகில்லாத முகத்தையுடையனவாகிய; முசுவும் குரங்கும் இரியத் துணிவுதீர நோக்கி - முசுவும் குரங்கும் தன்னைக் கண்டு அஞ்சி ஓடுதலின், அவற்றின் அச்சம் நீங்குமாறு அருளுடன் நோக்கி; தோன்றல் செல்லும் முன்னால் - தலைவன் போகும் அவ்விடத்தின் முன்னே; பனி வெண் திரைசூழ் கடல்போல் - குளிர்ந்த வெள்ளிய அலைசூழ் கடல்போல; பழுவம் தோன்றிற்று - ஒரு காடு தோன்றியது; அவண் - அவ்விடத்தே. 
 | 
  | 
| 
    (வி - ம்.) முசு - கருங்குரங்கு. இரிதல் - கெட்டோடுதல், துனிவு - துன்பம். நோக்கி என்றது அவற்றின் அச்சந்தீர்தற்குக் காரணமான அருட்பார்வையாலே நோக்கி என்பதுபட நின்றது, இதனால் சீவக நம்பியின் பேரருளுடைமை கூறப்பட்டது. ”கடத்தற் கின்னாக் கல்லதர் அத்தம் இதுவே” என்றுணர்த்தற்குப் ”பணி வெண்திரைசூழ் கடல் போற் பழுவம்” என்றார். பழுவம் - காடு. 
 | 
( 3 ) | 
|  1415 | 
பருகு வாரிற் புல்லிப் |  
|   | 
  பயங்கண் மாறத் துறக்கு |  
|   | 
முருகு விம்மு குழலார் |  
|   | 
  போல மொய்கொ டும்பி | 
 
 
 |