பதிகம் |
8 |
|
தால் இதனை ஓதாநின்றேன் என்பார், ”இதன்னைத் தேனூற நின்று செப்பலுற்றேன்” என்றும் , ”உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று ” என்பதுபற்றித் தெருண்டாரவை செப்பலுற்றேன் என்றும் ஓதினர்.
|
( 1 ) |
7 |
கோடாத செங்கோற் குளிர்வெண் குடைக்கோதை வெள்வே |
| லோடாத தானை யுருமுக்குர லோடை யானை |
|
வாடாத வென்றி மிகுசச்சந்த னென்ப மன்னன் |
|
வீடாத கற்பி னவன்றேவி விசயை யென்பாள். |
|
(இ - ள்.) கோடாத செங்கோல் -மாறுபடாத செங்கோலையும்; குளிர் வெண்குடை - தண்ணிய வெண்குடையையும்; கோதை வெள்வேல் - மாலையணிந்த வெள்ளிய வேலையும் ; ஓடாத தானை - புறங்கொடாத நால்வகைப் படைகளையும்; உருமுக்குரல் - இடிபோலப் பிளிறும்; ஓடை யானை - முகபடாம் அணிந்த யானையையும் (உடைய); மன்னன் - அரசன்; வாடாத வென்றி மிகு சச்சந்தன் என்ப - குறையாத வெற்றியினால் மேம்பட்ட சச்சந்தன் என்றுரைப்பர். அவன் தேவி வீடாத கற்பின் விசயை என்பாள் - அவனுக்குத் தேவி நீங்காத கற்பினையுடைய விசயை என்று பெயர் கூறப்படுவாள்.
|
|
(வி - ம்.) 'செங்கோல்' பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம் (அடைமொழி) ஆயினும் 'கோடாத' என்று அடை அடுத்தலிற் 'கோல்' என்னும் அளவில் நின்றது. வெண்குடை : இயைபின்மை மாத்திரை நீக்கிய விசேடணம், உருமுக்குரல் போலுங் குரலையுடைய யானை. வீடாத : விகாரம் ('விடாத' என்பது 'வீடாத' என விகாரப்பட்டது)
|
( 2 ) |
8 |
சேந்தொத் தலர்ந்த செழுந்தாமரை யன்ன வாட்கட் |
| பூந்தொத் தலர்ந்த பசும்பொற்கொடி யன்ன பொற்பி |
|
னேந்தொத் தலர்ந்த முலையின்னமிர் தன்ன சாயல் |
|
வேந்தற் கமுதாய் விளையாடுதற் கேது வாமே. |
|
(இ - ள்.) சேந்து ஒத்து அலர்ந்த - சிவந்து தம்மில் இணையொத்து மலர்ந்த ; செழுந்தாமரை அன்ன வாட்கண் - வளமிகு தாமரை மலர்போன்ற ஒளியுடைய கண்களையும்; பூங்தொத்து அலர்ந்த பசும் பொற்கொடி அன்ன பொற்பின் - மலர்க் கொத்துத் தன்னிடத்தே மலர்ந்த புதிய பொற்கொடி அனைய அழகினையும்; ஒத்து அலர்ந்த ஏந்து முலையின் - தம்மில் ஒத்து அடிபரந்த ஏந்தும் முலைகளையும் உடைய; அமிர்து அன்ன சாயல் - அமுதம் போன்ற மென்மையும் உடையாள்; வேந்தற்கு அமுதாய் - அரசனுக்கு அமுதமாகி ; விளையாடுதற்கு ஏது ஆம் - கூட்டத்திற்குக் காரணம் ஆவாள்.
|
|
(வி - ம்.) அமிர்தம் கண்ணுக்கினியதாகிய மென்மையும் தன்னை நுகர்ந்தார் பிறிது நுகராமல் தடுக்கும் மென்மையும் உடைமையின்
|
|