நாமகள் இலம்பகம் |
80 |
|
(இ - ள்.) வேகயானை மீளிவேல் வெய்யதானை ஐயகோல் மாகம்நீள் மணிமுடி - விரைந்து செல்லும் யானையும், சிறந்த வேலேந்திய பிற கொடிய படைகளும், வியக்கத்தக்க செங்கோலும், வானம் புகழும் நீண்ட மணிமுடியும் ; மாரி வண்கைமாசு இல் சீர்ஏக ஆணை வெண்குடை - முகிலனைய கொடைதருங்கையும் குற்றமற்ற மிகுபுகழும் தனியாட்சியும் வெண்குடையும் உடைய ; இந் நகர்க்கு மன்னவன் - இந் நகரத்தரசனது ; நாகம் நீர நல்நகர் நன்மை தன்னம் செப்புவாம் - வானுலகனைய அழகிய அரண்மனையினது நன்மையைச் சிறிது கூறுவோம்.
|
|
(வி - ம்.) தானை என்றது ஒழிந்த மூன்று படையை. தேவர் புகழும் முடி என்று குலநன்மை கூறினார். சீர் - மிக்க புகழ். ஏக ஆணை - பொதுவற ஆளுதல்.
|
|
இதன்கண் அரசற்குரிய அளியும் தெறலும் நிரலே ஐயகோல், மாரி வண்கை, வெண்குடை என்பவற்றானும், வேகயானை, மீளிவேல், வெய்யதானை, ஏகவாணை என்பவற்றானும் உணர்த்தப்பட்டன.
|
|
நாகம் - வானுலகு, நாகருலகுமாம். நகர் என்றது அரண்மனையை.
|
( 112 ) |
142 |
நீணி லம்வ குத்துநீர் நிரந்துவந் திழிதரச் |
|
சேணி லத்தி யற்றிய சித்தி ரச்சு ருங்கைசோ் |
|
கோணி லத்து வெய்யவாங் கொடுஞ்சுறத் தடங்கி டங்கு |
|
பூணி லத்து வைத்ததோர் பொற்பி னிற்பொ லிந்ததே. |
|
(இ - ள்.) நீர்நிரந்து வந்து இழிதர - நீர் ஒழுங்காக வந்து இழியுமாறு; நீள்நிலம் வகுத்து - நீள நிலத்தை வெட்டி; சேண் நிலத்து இயற்றிய சித்திரச் சுருங்கைசேர் - நகரத்தின் வெளியிலுள்ள அகழ் தொடங்கிப் படுத்த அழகிய மறைவான கற்படை சேர்ந்த; கோள்நிலத்து வெய்யஆம் கொடுஞ்சுறத் தடம்கிடங்கு - வந்தோரை அகப்படுத்திக் கொல்லுதற்குரிய ஆழமான நீரில் கொடிய சுறாமீன் வாழும் பெரிய அகழி; நிலத்துப் பூண் வைத்தது ஓர் பொற்பினில் பொலிந்தது - நிலமங்கைக்குப் பூணிட்டது போன்ற ஒப்பற்ற அழகினாற் பொலிவுற்றது.
|
|
(வி - ம்.) சுறவு என்பது ஈறு கெட்டுச் 'சுற' என வருதல் புறனடையால் (தொல் உயிர்மயங்கு- 82) கொள்க. சுருங்கை - கரந்த கற்படை; நகரத்தின் வெளியகழிக்கும் அரசன் அரண்மனை சூழ்ந்த அகழிக்கும் உள்ள வழி.
|
( 113 ) |
143 |
இஞ்சி மாக நெஞ்சு போழ்ந் தெல்லை காண வேகலின் |
|
மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து மாகம் நீண்ட நாகமு |
|
மஞ்சு நின்னை என்றலி னாண்டு நின்று நீண்டதன் |
|
குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே. |
|