பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 801 

   (வி - ம்.) செல்வர் மனத்தின் என்புழி ஆகூழால் திருவுடையராய கீழ்மக்களின் நெஞ்சம்போல என்று கொள்க. என்னை? ”மேலலார் செல்வமேபோல் தலைநிறுவி” என இவரே முன்னருங் கூறுதல் காண்க. ஓங்குதல் மனதிற் செருக்குற்று நிமிர்தல். நெறிக்கு ஏறுதற்கரிய தாய்ச் செல்லச் செல்ல உயர்ந்துபோதல் எனக் கொள்க. இனிதின் என்புழி 'இன்' ஐந்தாவதன் உருபு; ஒப்புப் பொருளில் வந்தது. இனிது போல எனவே காட்சிமாத்திரையான் இனிதுபோலத் தோன்றிப் பின் துயர்தருவது என்பது பெற்றாம். பூந்தாது துன்பந் தருவதாதலை : ”மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச் - சண்பகம் நிறைத்த தாதுசேர் பொங்கர் - பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் - கையறு துன்பங்காட்டினுங் காட்டும்” (சிலப், 10-68-71 ) என்றார் பிறரும். இனி 'மாவின் மயங்கி' என்று பாடம் ஓதிப் 'புலி முதலியவற்றால் மயங்கி' யென்றும் உரைப்பர்.

( 5 )
1417 சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியா
வனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கி
இனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடி
நனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்.

   (இ - ள்.) வரை சூழ்ந்த சுனைகள் குவளை கண்களாக விழியா - மலைகள் தம்மிடத்திற் சூழ்ந்துள்ள சுனைகளில் உள்ள குவளை மலர்கள் கண்களாக விழித்துப் பார்த்து; மைந்தற்கு வனையல் ஆகா உருவம் நோக்கி இரங்கி - சீவகனுக்குரிய எழுத வியலாத உருவத்தைக் கண்டு வருந்தி; இனைவபோலும் அருவி - அழுவனபோலும் தோற்றமுள்ள அவ்வருவியிலே; இனிதின் ஆடி - மகிழ்வுடன் குளித்து; நனைகொள் போது வேய்ந்து - தேன் பொருந்திய சுனைமலராலே இறைவன் திருவடிகளை மறைத்து; நாதன் பாடுகின்றான் - இறைவனைப் பாடத்தொடங்கினான்.

 

   (வி - ம்.) வரைகள் தம்மைச் சூழ்ந்த சுனைகள் கண்களாக அவற்றின் மலர்ந்த குவளை மலர்கள் கருவிழிகளாகக் கொண்டு நோக்கிக் கண்ணீர் வீழ்ந்து அழுவன போலத் தோன்றுதற்குக் காரணமான இனிய அருவியின் ஆடி என்று இயைத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் உரையில் தன்னைச் சூழ்ந்த என்றிருத்தல், தம்மைச் சூழ்ந்த என்றிருத்தல் வேண்டும், திருத்தாத வழி, ஒருமை பன்மைகள் எழுவாய் முதலியன தலைதடுமாறுதலுணர்க.

 

   நாதன் - இறைவன். நச்சினார்க்கினியர் சுனைகளை எழுவாயாக்குதல் சிறப்பாகத் தோன்றவில்லை.

( 6 )

வேறு

 
1418 செய்தா னிருவினையின்
  பயத்தைச்சேருஞ் சென்றென்றி
யெய்தா னதன்பயத்தைப்
  பிறனேதுய்த்த லியல்பென்றி