பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 803 

றின் இயல்பால் இல்லையென்று கூறுகின்றாய்; வண்டு ஆர்த்து நாற்காதம் வண்ணமாலை சுமந்து ஒசிந்துகொண்டு ஏந்து பூம்பிண்டிக் கோமான் - வண்டுகள் முரன்று நாற்காதம் பரவி அழகிய மாலைகளைச் சுமந்து நுடங்கிக்கொண்டு ஏந்து மலர்ப் பிண்டிக்கோமானே!; நின்னைத் தொழுதேன் - (ஆதலால், ஒரு பொருளிலே உண்டும் இல்லையுங் கூறிய) நின்னை அஞ்சி வணங்கினேன்.

 

   (வி - ம்.) உயிர் தனதியல்பின் உணர்தலாவது, மெய்ப்பொருளாந்தனது இயல்பில் வைத்து ஆராய்ந்துணர்தல்.

 

   பிறிதின் இயல்பால் ஆராய்தலாவது, உடல் முதலிய பொய்ப் பொருளின்கண் வைத்து ஆராய்தல்.

 

   இதனாற் கூறியது மெய்யுணர்வார்க்கு உயிர் உள்பொருள்; அஃதுணரமாட்டார்க்கு அஃதில் பொருள் என்பதாம்.

 

   பூம்பிண்டிக் கோமான் : விளி : அருகன்.

 

   இனி ஆசிரியர் நச்சினார்க்கினியர் : ”உயிர் ஒருவனிடத்துண்டு; தூணில் இல்லை. ஆதலால், உயிர் தனக்கே உண்டும் இல்லையும் தங்கின. இத் தன்மை வேறுபாட்டால் அங்கில்லை” என்பர்.

( 8 )
1420 காதலா லெண்வினையுங்
  கழிபவென்றி யக்காத
லாதலா லெண்வினையுங்
  கழியாவென்று மறைதியாற்
போதுலாய்த் தேன்றுளித்துப்
  பொழிந்துவண்டு திவண்டுலாங்
கோதைதாழ் பூம்பிண்டிக்
  கோமானின்னைத் தொழுதேனே.

   (இ - ள்.) காதலால் எண் வினையும் கழிப என்றி - காதலினால் எண்வகை வினையும் கழிகின்றன என்கிறாய்; அக் காதல் ஆதலால் எண்வினையும் கழியா என்றும் அறைதி - அக் காதலே மற்றொன்றின் ஆகும்போது எண்வினையும் கழியா என்றும் அறைகின்றாய்; போது உலாய்த் தேன்துளித்துப் பொழிந்து வண்டு திவண்டு உலாம் கோதை தாழ் பூம்பிண்டிக் கோமான் - மலர்கள் சூழ்ந்து தேன்துளிகொண்டு பெய்து வண்டுகள் அசைந்து உலவும் மாலை தங்கிய மலர்ப்பிண்டிக் கோமானே!; நின்னைத் தொழுதேன் - இவ் வேறுபட்ட மொழியால் அஞ்சி நின்னை வணங்கினேன்.

 

   (வி - ம்.) எண்வினையாவன : அப்பிரத்தியாக்கியானக் குரோதம், அப்பிரத்தியாக்கியான மானம் அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியானலோபம், பிரத்தியாக்கியான குரோதம், பிரத்தியாக்கி