நாமகள் இலம்பகம் |
81 |
|
(இ - ள்.) இஞ்சி மாகம் நெஞ்சு போழ்ந்து எல்லை காண ஏகலின் - மதிலானது வான நடுவைப் பிளந்து வானுலகின் எல்லையைக் காணச் சென்றதால் ; மஞ்சு சூழ்ந்துகொண்டு அணிந்து -முகில் அதனைப் (போகாமல் தடுத்துக்) காலைக் கட்டிக் கொண்டு; மாகம் நீண்ட நாகமும் நின்னை அஞ்சும் - 'வானத்திலே உயர்ந்த வானுலகும் நினக்கு அஞ்சுகின்றது'; என்றலின் - என்பதனால்; ஆண்டு நின்று - தான் முகில் மண்டலத்தளவிலே நின்று; தன் குஞ்சி நீண்ட மாண் கொடிக்கையால் கூவிவிட்டது ஒத்ததே - தன் தலையில் நீண்ட கொடிக்கையாலே, 'நம்மை வந்து காண்க' என்று கூப்பிட்டுவிட்ட தன்மையை ஒத்தது (கொடிகள் அசையுந்தன்மை.)
|
|
(வி - ம்.) குஞ்சி - கொடிநாட்டுங் குழி ; மூங்கிலுமாம்.
|
|
இதன்கண் இந்திரனுடைய முகில் அவன் நாட்டிற் புகும் மதில், பகைவனைச் சந்து செய்வித்தது என்றலும், அப்பகைவனாகியமதில், தன்னை வந்து காணும்படி இந்திரனைப்பணித்தது என்றலும் இனிய கற்பனையாதல் உணர்க.
|
( 114 ) |
144 |
முத்த மாலை முப்புரி மூரி மாம ணிக்கத |
|
வொத்த நான்கு கோபுர மோங்கி நின்றொ ளிர்வன |
|
சத்தி நெற்றி சூட்டிய தாம நீண்ம ணிவணன் |
|
றத்தொ ளிம்ம ணிம்முடித் தாம நால்வ போலுமே. |
|
(இ - ள்.) மூரிமா மணிக்கதவு ஒத்த நான்கு கோபுரம் - மிகப் பெரிய மணிகள் பதித்த கதவுடைய தம்மில் ஒத்த நான்கு கோபுரங்களிலும் ; ஓங்கி நின்று ஒளிர்வன சத்தி நெற்றி சூட்டிய - ஓங்கி நின்று ஒளிசெய்வனவாகிய சூலத்தின் தலையிலே அணிந்த; முப்புரி முத்தமாலை - முப்புரியாகவுள்ள முத்துமாலை; தாமம்நீள் மணிவணன் தத்துஒளி மணிமுடி - ஒளிமிகும் நெடியோனாகிய திருமாலின் பரவும் ஒளியையுடைய மணிமுடியில் ; தாமம் நால்வ போலும் - மாலைகள் தொங்குவன போலும்.
|
|
(வி - ம்.) 'போன்ற'வும் பாடம். முப்புரியாகிய முத்தமாலையையுடைய கதவுமாம்.
|
( 115 ) |
145 |
சங்கு விம்மு நித்திலஞ் சாந்தொ டேந்து பூண்முலைக் |
|
கொங்கு விம்மு கோதைதாழ் கூந்த லேந்து சாயலா |
|
ரிங்கி தக்க ளிப்பினா லெய்தி யாடும் பூம்பொழில் |
|
செங்க ணிந்தி ரன்னகர்ச் செல்வ மென்ன தன்னதே. |
|
(இ - ள்.) சங்கு விம்மு நித்திலம் சாந்தொடு ஏந்து பூண் முலை - சங்கு சூல்முற்றி யீன்ற முத்துமாலையைச் சந்தனத்துடன் தாங்காநின்ற அணிகலன் பிறவும் அணிந்த முலையினையும்;
|
|