| கேமசரியார் இலம்பகம் | 
810  | 
 | 
  | 
| 
 காட்டில் உறையும் கரடி சென்று குளத்திலே குளித்து; காட்டில் நின்று வீட்டினை விளைக்கவேண்டும் - (அதனால்) காட்டிலிருந்து வீட்டை அடையவேண்டும்; வெளிற்றுரை விடுமின் என்றான் - பொருளற்ற மொழியை விடுங்கோள் என்றான். 
 | 
  | 
| 
    (வி - ம்.) சடையுடைமை கருதிக் கரடியை உவமை கூறினான். சடை வளர்த்தலும் காட்டிடை வாழ்தலும் கயமூழ்கலும் உடைமையாற் கரடி பிறப்பொழியாமை போல இவ்வொழுக்கமாத்திரையானும் பிறப்பறாது என்பது கருத்து. இதுவும் அவ்வுவமமே. 
 | 
( 20 ) | 
|  1432 | 
கலைவளர் கிளவி யார்தங் காமர்மென் சேக்கை நீங்கி |   |  
|   | 
யிலைவளர் குரம்பை யங்க ணிருநிலஞ் சேக்கை யாக |   |  
|   | 
முலைவள ராகந் தோய முழுவினை முரியு மாயின் |   |  
|   | 
மலைவளர் குறவர்க் கம்மா வினைகளு மாயு மன்றே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கலைவளர் கிளவியார் தம் காமர் மென் சேக்கை நீங்கி - கலை வளர்தற்குரிய மொழியாரான மகளிருடன் துயிலும் அழகிய மெல்லிய அணையை விட்டு; இலைவளர் குரம்பை அங்கண் - இலைகளால் மூடிய குடிசையிலே; இருநிலம் சேக்கை ஆக முலைவளர் ஆகம் தோய - பெருநிலமே அணையாக அக் கிளவியாரின் முலைவளர் மார்பைத் தழுவ; முழுவினை முரியும் ஆயின் - வினைகள் யாவும் கெடுமென்றால்; மலைவளர் குறவர்க்கு அம் மா வினைகளும் மாயும் அன்றே - மலைவாழ்வினையுடைய குறவர்கட்கு அக்கொடிய வினைகளெல்லாம் கெடும் அல்லவா? 
 | 
  | 
| 
    (வி - ம்.) இஃது வானப்பிரத்த நிலையினைப் பழித்தபடியாம். அந்நிலையின்கண் உளதாம் பேதைமையை விளக்குவான், காமர் மென் சேக்கையை நீங்கி இருநிலஞ் சேக்கையாக என்று விதந்தோதினான். 
 | 
  | 
| 
    இயல்பாகவே குறவர்களுக்கு இவ்வானப்பிரத்த நிலை எய்தியதாகவும் அவர் பிறப்பறாமைபோல இதனாற் பிறப்பறாது என்பது கருத்து. 
 | 
  | 
| 
    கலை - ஈண்டு இசைக்கலை. காமர் மென்சேக்கை என்றதனால், கற்கள் உறுத்தும் புன்னிலச் சேக்கை எனவும், இலைவளர் குரம்பை என்றதனால் மணிமாடத்து நிலாமுற்றத்திலமைந்த காமர்மென்சேக்கை எனவும் விரித்தோதுக. 
 | 
( 21 ) | 
|  1433 | 
வெண்ணிறத் துகிலி னாங்கண் வீழ்ந்துமா சாகிநின்ற |   |  
|   | 
வொண்ணிற வுதிரந் தன்னை யுதிரத்தா லொழிக்க லாமே |   |  
|   | 
பண்ணிறக் கிளவி யார்தம் பசையினாற் பிறந்த பாவங் |   |  
|   | 
கண்ணிற முலையி னார்தங் கலவியாற் கழிக்க லாமே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வெள் நிறத் துகிலின் ஆங்கண் வீழ்ந்து மாசு ஆகி நின்ற - வெண்ணிற ஆடையிலே வீழ்ந்து கறையாகி நின்ற; ஒள் நிற உதிரந்தன்னை உதிரத்தால் ஒழிக்கலாமே - ஒளிரும் நிறமுடைய குருதியைக் குருதியாலே போக்க முடியுமோ? 
 | 
  |