| கேமசரியார் இலம்பகம் |
813 |
|
|
|
உயிரைக் கெடாமல் அவ்வுயிர் உய்யும் வகையிலே நடத்தல்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான் - இம் மூன்றொழுக்கமும் இப்படி நிறைந்த பொழுதே இருவினையும் கெடும் என்றான்.
|
|
|
(வி - ம்.) இச் செய்யுளில் நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் என்னும் மூன்றன் இயல்பும் கூறுகின்றார். இவற்றை, இரத்தினத்திரயம் என்றும் பரத்திரயம் என்றும் வழங்குப.
|
|
|
இவற்றுள் நன்ஞானம் - ”எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப” தாகிய அறிவு, நற்காட்சி ஐயமின்மை அவாவின்மை, உவர்ப்பின்மை, மயக்கமின்மை, அறப்பழி நீக்கல், அழிந்தாரைத் தாங்கல், அறத்துக்கு அளவளவு, அறத்தை விளக்கல் என்னும் எண்வகை உறுப்பிற்று. நல்லொழுக்கம் அணுவிரதம் மாவிரதம் என இருவகைப்படும்.
|
( 25 ) |
| 1437 |
குன்ற னானுரைப்பக் கேட்டே | |
| |
பாகத்தார் குடும்ப நீக்கி | |
| |
யின்றுகண் விடுக்கப் பட்டேம் | |
| |
யாமென வெழுந்து போகி | |
| |
வென்றவன் பாதஞ் சோ்ந்து | |
| |
வீட்டுநன் னெறியைப் பெற்றார் | |
| |
சென்றது பருதி வட்டஞ் | |
| |
செம்மலு மசைவு தீர்ந்தான். | |
|
|
(இ - ள்.) குன்று அனான் உரைப்பக் கேட்டு - சலிப்பற்ற சீவகன் இவ்வாறு கூறக்கேட்டு; பாகத்தார் குடும்பம் நீங்கி - நல்வினை வந்தடையும் நிலையுடையார் மனைவியரைத் துறந்து; யாம் இன்று கண் விடுக்கப் பட்டேம் என எழுந்து போகி - யாங்கள் இன்று நின்னாலே அறிவுண்டாக்கப் பட்டேம் என்று கூறி எழுந்து சென்று; வென்றவன் பாதம் சேர்ந்து வீட்டு நன்னெறியைப் பெற்றார் - காமனை வென்றவனுடைய திருவடியை அடைந்து வீட்டிற்குச் செல்லும் நல்ல வழியைப் பெற்றார்; பருதி வட்டம் சென்றது - அவ்வளவிலே ஞாயிறு மறைந்தது ; செம்மலும் அசைவு தீர்ந்தான் - சீவகனும் இளைப்புத் தீர்ந்தான்;
|
|
|
(வி - ம்.) குன்றம் சீவகனுக்குச் சலியாமை என்னும் பண்பு பற்றி வந்த பெருமித வுவமை.
|
|
|
பாகத்தார் என்றது இத்தகைய ஞானக்கேள்வியைக் கேட்டற்குரிய அதிகாரிகள் என்பதுபட நின்றது. குடும்பம் என்றது மனைவி முதலிய தொடர்ப்பாட்டினை.
|
|
|
கண் : ஈண்டு அறிவுக்கண். கண் திறப்பிக்கப்பட்டேம் என்றவாறு. முன்னர் (24) இன்னே என்றதற்கேற்ப ஈண்டும் எழுந்து போய் என்றார்.
|
|