நாமகள் இலம்பகம் |
82 |
|
கொங்கு விம்மு கோதை தாழ்கூந்தல் ஏந்து சாயலார் - மணம் மிகும் மாலை பொருந்திய கூந்தலினையும் உடைய மென்மையுறும் மகளிர் ; இங்கிதக் களிப்பினால் எய்தி ஆடும் பூம்பாழில் - காமக் குறிப்புடன் கூடிய களிப்புடன் சென்று ஆடும் மலர்க்கா; செங்கண் இந்திரன் நகர்ச்செல்வம் என்னது அன்னது - செங்கண்ணனான இந்திரன் நகரிற் கற்பகச்சோலை எத்தகையதோ அத்தகையதாகும்.
|
|
(வி - ம்.) செல்வம் : ஆகுபெயர்; சோலையை உணர்த்தியதால்
|
( 116 ) |
146 |
வெள்ளி யானை மென்பிடி மின்னி லங்கு பைம்பொனாற் |
|
றுள்ளு மானொ ருத்தலுஞ் செம்பொ னம்பொன் மான்பிணை |
|
யுள்ளு காம முள்சுட வேந்த னாங்கு றைவதோர் |
|
பள்ளி மாட மண்டபம் பசுங் கதிர்ப்ப வண்ணமே. |
|
(இ - ள்.) வெள்ளி யானை மின்இலங்கு பைம்பொனால் மென்பிடி - வெள்ளியாற் செய்த களிறும் ஒளிவிடும் புதிய பொன்னாற் செய்த பிடியும்; செம்பொன் துள்ளும் மான் ஒருத்தலும் - செம்பொன்னாற் செய்த துள்ளும் கலைமானும்; அம்பொன் மான்பிணை - அழகிய பொன்னாற் செய்த பிணைமானும்; உள்ளு காமம் உள்சுட வேந்தன் ஆங்கு உறைவது - ஒன்றை மற்றொன்று நோக்குங் காமநோக்கு வேந்தன் மனத்திலே வேட்கைத்தீயை எழுப்ப அவன் அச்சோலையில் தங்குவதாகிய; ஓர் மண்டபம் பள்ளிமாடம் பசுங்கதிர்ப் பவணம் - ஒரு மண்டபத்தில் உள்ள பள்ளிமாடம் புத்தொளி வீசும் நாகருலகை ஒக்கும்.
|
|
(வி - ம்.) இனி வெள்ளியாலே யானையும் பிடியும் செய்த என்றுமாம். இப்பொருள் ஆற்றொழுக்கானது.
|
( 117 ) |
147 |
கோழ ரைம ணிம்மடற் கூந்த னெற்றி யேந்திய |
|
மாழை யந்தி ரள்கனி மாம ணிம்ம ரகதஞ் |
|
சூழ்கு லைப்ப சுங்கமுகு சூலு பாளை வெண்பொனா |
|
லூழ்தி ரண்ம ணிக்கயி றூச லாட விட்டதே. |
|
(இ - ள்.) மாழைதிரள் அம்கனி - பொன்னாற் செய்த அழகிய திரண்ட பழத்தையும்; மாமரகத மணி சூழ்குலை - பெருமை மிகும் மரகத மணியாற் செய்யப்பெற்ற குலையையும்; வெண்பொனால் சூலுபாளை - வெள்ளியாற் செய்த சூலுடைய பாளையையும்; ஏந்திய கோழ் அரை - ஏந்திய கொழுவிய அடிப்பாகத்தினையும்; மணிமடல் பசுங்கூந்தல் கமுகு நெற்றி - நீலமணியாற் செய்த மடலினையும் உடைய பசிய கூந்தற் கமுகின் நெற்றியிலே;
|
|