| கேமசரியார் இலம்பகம் | 
820  | 
 | 
  | 
வேறு
 | 
  | 
|  1450 | 
வார்சிலை வடிப்ப வீங்கி |   |  
|   | 
   வரையெனத் திரண்ட தோளான் |   |  
|   | 
சோர்புய றொலைத்த வண்கைச் |   |  
|   | 
  சுபத்திரன் மனைவி பெற்ற |   |  
|   | 
சீர்நலம் கடந்த கேம |   |  
|   | 
  சரியெனத் திசைக ளெல்லாம் |   |  
|   | 
போ்நலம் பொறித்த பெண்மைப் |   |  
|   | 
  பெருவிளக் காகி நின்றாள். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வார்சிலை வடிப்ப வீங்கி வரையெனத் திரண்ட தோளான் - நீண்ட வில்லைப் பயிற்றுதலாற் பருத்து மலைபோலத் திரண்ட தோளையுடையான்; சோர் புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் - மழைபெய்யும் முகிலை ஓட்டிய வண்மையுடைய கையினான் ஆன சுபத்திரன் என்னும் பெயரினானுக்கு; மனைவி பெற்ற - அவன் மனைவி நிப்புதியென்பாள் ஈன்ற, சீர் நலம் கடந்த கேமசரியென (ஒரு பெண்) - பிறமகளிரின் சிறந்த அழகை வென்ற கேமசரி என்று; திசைகள் எல்லாம் பேர்நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக்கு ஆகி நின்றாள் - திசைகளில் எல்லாம் பெயரின் நலத்தை எழுதிய பெண்மையையுடைய பெரு விளக்கு என ஆகி இருந்தாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) ஆகி யெனவே மங்கைப்பருவமுடையாளென்பது பெற்றாம். கேமசரி என (ஒரு பெண்) என ஒரு மொழி சேர்க்க. 
 | 
( 39 ) | 
|  1451 | 
மாசிலாள் பிறந்த ஞான்றே |   |  
|   | 
  மதிவலான் விதியி னெண்ணிக் |   |  
|   | 
காசிலாள் கண்ட போழ்தே |   |  
|   | 
  கதுமென நாணப் பட்டான் |   |  
|   | 
றூசுலா மல்கு லாட்குத் |   |  
|   | 
  துணைவனாம் புணர்மி னென்று |   |  
|   | 
பேசினா னன்று கொண்டு |   |  
|   | 
  பெருவிருந் தோம்பு கின்றான். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) மாசு இலாள் பிறந்த ஞான்றே - குற்றமிலாத அவள் பிறந்தபொழுதே; மதிவலான் விதியின் எண்ணி - அறிவில் வல்லவனான கணி நூல் முறையானே ஆராய்ந்து; காசு இலாள் கண்டபோழ்தே கதும் என நாணப்பட்டான் - இவள் கண்ட பொழுதே நாணமுறப்பட்டவன்; தூசு உலாம் அல்குலாட்குத் துணைவன் ஆம் - ஆடையணிந்த அல்குலையுடையாட்குக் கணவ 
 | 
  |