பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 821 

னாவான்; புணர்மின் என்று பேசினான் - அவனுக்குக் கொடுங்கோள் என்று கூறினான்; அன்று கொண்டு பெருவிருந்து ஓம்புகின்றான் - அன்று தொட்டுச் சுபத்திரன் தன் மகள் அத்தகையானைக் காண்டற்குப் பெருவிருந்து இடுதலைக் கைக்கொண்டுள்ளான்.

 

   (வி - ம்.) தன் கணவனைத் தவிர மற்றோர் அவட்கு ஆடவராய்த் தோன்றாரென்பது தோன்றப் பலரையும் நோக்கும் அவளை, 'மாசிலாள்' என்றும், 'காசிலாள்' என்றும் கூறினார்.

 

   மதிவல்லான் என்றது கணிவனை. விதி - நூல் கூறும் முறை. காசிலாள் - குற்றமற்றவள் என்னும் பொருட்டு; இது வாளா அவள் என்னுஞ் சுட்டு மாத்திரையாய் நின்றது.

 

   பெருவிருந்தோம்புகின்றான் என்றது, அத்தகையானைக் காணும் பொருட்டு என்பதுபட நின்றது.

( 40 )
1452 தாழ்தரு பைம்பொன் மாலை தடமலர்த் தாம மாலை
வீழ்தரு மணிசெய் மாலை யிவற்றிடை மின்னி னின்று
சூழ்வளைத் தோளி செம்பொற் றூணையே சார்ந்து நோக்கு
மூழ்படு காத லானை யொருபிடி நுசுப்பி னாளே.

   (இ - ள்.) ஒருபிடி நுசுப்பினாள் சூழ்வளைத் தோளி - ஒரு பிடியில் அடங்கும் இடையினாளாகிய, வளைசூழ்ந்த தோளினாள்; தாழ்தரு பைம்பொன்மாலை - தூங்கப்பட்ட பைம்பொன்னாலான மாலை; தடமலர்த் தாமம் மாலை - பெரிய மலர்களால் தொடுக்கப்பட்ட மாலை; வீழ்தரு மணிசெய் மாலை - விருப்பம் ஊட்டும் மணிகளாற் செய்யப்பட்ட மாலை; இவற்றிடை - ஆகிய இவற்றின் இடையிலே; மின்னின் நின்று - மின்போல நின்று; செம்பொன் தூணையே சார்ந்து - பொன்னாலான தூணைப் பொருந்திநின்று, ஊழ்படு காதலானை நோக்கும் - ஊழ்தருகின்ற கணவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

 

   (வி - ம்.) தான் நோக்குழிச் சிறிது தோன்றித் தன்னைப் பிறர் நோக்குழிக் கணத்திலே தூணின் மறைந்து விடுதல் பற்றி, மின்னின், தூணையே சார்ந்து நோக்கும் என்றார்.

 

   தந்தை செய்யுள் விருந்திடையே இவள் ஒரு தூணைச் சார்ந்து நின்று தனக்கு ஊழினால் தரப்படுஞ் காதலனை நோக்குவாள் என்க.

( 41 )
1453 சேயிழை கணவ னாகுந் திருமகன் றிறத்து நாளு
மாயிரத் தெட்டு நோ்ந்த வாரமு தடிசி லூட்டி
யேயின வகையி னாலே யாறிரண் டெல்லை யாண்டு
போயின வென்ப மற்றப் பூங்கொடிச் சாய லாட்கே.