| கேமசரியார் இலம்பகம் | 
822  | 
 | 
  | 
| 
    (இ - ள்.) சேயிழை கணவன் ஆகும் திருமகன் திறத்து - கேமசரியின் கணவனாகிய திருமகனைக் காணுதற்கு; நாளும் ஆயிரத்தெட்டு நேர்ந்த ஆரமுது அடிசில் ஊட்டி - வைகலும் ஆயிரத்தெண்மருக்கு ஆக்கிய ஆரமுது போலும் சோற்றை ஊட்ட; ஏயின வகையினாலே அப் பூங்கொடிச் சாயலாட்கு - பொருந்திய வகையாலே அப் பூங்கொடிபோலும் மென்மையாட்கு; ஆறிரண்டு எல்லை ஆண்டு போயின என்ப - பன்னிரண்டு ஆகிய எல்லையையுடைய ஆண்டுகள் கழிந்தன என்க. 
 | 
  | 
| 
    (வி - ம்.) சேயிழை : அன்மொழித் தொகை. அமுதடிசில் : உவமத்தொகை. 
 | 
  | 
| 
    'திருமகன் திறத்து' என்பது, 'என்றிறத்து அவலங்கொள்ளல்' என்பதுபோல (புறநா. 253) பொருட்டு என்னும் பொருளில் வந்தது. ஊட்டி - ஊட்ட : எச்சத்திரிபு. 
 | 
( 42 ) | 
|  1454 | 
முருக்கிதழ் குலிக மூட்டி |   |  
|   | 
  வைத்தன முறுவற் செவ்வாய்த் |   |  
|   | 
திருக்கவி னிறைந்த வெங்கட் |   |  
|   | 
  பணைமுலைத் தேம்பெய் கோதைப் |   |  
|   | 
புரிக்குழற் பொன்செய் பைம்பூட் |   |  
|   | 
  புனையிழை கோல நோக்கித் |   |  
|   | 
தரிக்கிலா துருகி நையுந் |   |  
|   | 
  தடமலர்க் கோதை நற்றாய். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) முருக்கிதழ் குலிகம் ஊட்டி வைத்த அனமுறுவல் செவ்வாய் - முருக்கமலரின் இதழை இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்ற, முறுவலையுடைய சிவந்த வாயையும்; திருக்கவின் நிறைந்த வெம்கண் பணைமுலை - திருமகளின் அழகு நிறைந்த விருப்பம் ஊட்டுங் கண்களையுடைய பருத்த முலைகளையும்; தேன் பெய் கோதை - தேன் பொருந்திய மலர்மாலையையும்; புரிக்குழல் - நெறித்த கூந்தலையும்; பொன்செய் பைம்பூண் - பொன்னாலான புத்தணியையும் உடைய; புனையிழை கோலம் நோக்கி - கேமசரியின் கோல முதிர்ச்சியைப் பார்த்து; தடமலர்க் கோதை நற்றாய் - பெரிய மலராலான மாலையினாளின அன்னை; தரிக்கிலாது உருகி நையும் - பொறாமல் வருந்துவாள். 
 | 
  | 
| 
    (வி - ம்.) இயல்பாகவே சிவந்த முருக்க மலரின்மேல் இங்குலிகத்தையும் ஊட்டி வைத்தாற்போன்று நனிசிவந்த வாய் என்பார், முருக்கிதழ் குலிகம் ஊட்டிவைத்தன செவ்வாய் என்றார். 
 | 
  | 
| 
    புனையிழை : அன்மொழித் தொகை; கேமசரி. இத்தகைய அழகினாட்கு இன்னும் கணவன் வாய்த்திலனே என்று நற்றாய் நோக்குந்தோறும் நைந்துருகினாள் என்பது கருத்து. 
 | 
( 43 ) |