பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 823 

1455 மாவடு மருட்டு நோக்கின் மதிமுக மழைக்கண் மாசில்
பூவொடு புரையுஞ் சாயல் புனைநலந் தனித்து வைக
வேவடு பிணையி னோக்கி யிறைவளை கழல நின்ற
தாய்படுந் துயர மெல்லாந் தாரவ னீக்கி னானே.

   (இ - ள்.) மதிமுகம் மாஅடு மருட்டும் நோக்கின் மழைக்கண் - திங்கள் போலும் முகத்திலே மானை வென்று, கண்டாரை மயக்கும் பார்வையையுடைய குளிர்ந்த கண்களையும்; பூவொடு புரையும் சாயல் - மலரொடு பொருந்தும் மென்மையினையும் உடைய கேமசரி; புனைநலம் தனித்து வைக - ஒப்பனை செய்த இத்தகைய அழகுடன் தனியே தங்குதலால்; ஏ அடு பிணையின் நோக்கி - அம்பால் ஏறுண்ட மான்பிணைபோலப் பார்த்து; இறைவளை கழல நின்ற - மன்கைவளை கழலுமாறு மெலிந்து நின்ற; தாய்படு துயரம் எல்லாம் - (கேமசரியின்) அன்னையுறுந் துயரத்தையெல்லாம்; தாரவன் நீக்கினான் - சுபத்திரன் போக்கினான்.

 

   (வி - ம்.) மாவடுப் பிளவினை ஒத்த கண் எனினுமாம். தாரவன் : சுபத்திரன். நீக்கினான் என்றது பின்விருமாறு கூறி நீக்கினான் என்பது பட நின்றது.

 

   ஏ - அம்பு. பிணை - பெண்மான். இறை - முன்கை. தாய் : நிப்புதி.

( 44 )
1456 போதுவாய் திறந்த போதே
  பூம்பொறி வண்டு சோ்ந்தாங்
கூதுமே மகளிர்க் கொத்த
  போகமு மன்ன தொன்றே
யாதுநீ கவல வேண்டா
  வாரழ குடைய நம்பி
காதலான் றவத்தின் மிக்கான்
  கண்ணுறு நாளை யென்றான்.

   (இ - ள்.) போது வாய் திறந்தபோதே - மலரின் வாய் நெகிழ்ந்த அளவிலே; பூம் பொறி வண்டு சேர்ந்து ஆங்கு ஊதுமே - அழகிய புள்ளிகளையுடைய வண்டு பொருந்தி நுகருமன்றோ?; மகளிர்க்கு ஒத்த போகமும் அன்னது ஒன்றே ஆகும் - பெண்களுக்குப் பொருந்தின நுகர்ச்சியும் அத்தகையதாகிய ஒன்றேயாம்; (ஆதலின்); ஆர் அழகு உடைய நம்பி காதலான் தவத்தின் மிக்கான் - சிறந்த அழகுடைய நம்பியும் இவளாற் காதலிக்கப்படுவானும் ஆகிய தவத்திற் சிறந்தவன்; நாளை கண்