பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 824 

   (இ - ள்.) தொடுகழல் குரிசில் - தொடுத்த கழலையுடைய சீவகன்; பொன் நிலத்து எழுந்தது ஓர் பொருஇல் பூங்கொடி - பொன்னாகிய நிலத்திலே தோன்றியதான ஓர் ஒப்பற்ற காமவல்லியைப் போல்; மின்னுவிட்டு எரிவது ஓர் நலத்தள் - ஒளிவிட்டு விளங்குவதொரு நலத்தினளாகிய; வீங்கு இருள் பின்னி விட்ட அன குழல் பெருங்கண் பேதையூர் - மிக்க இருளைப் பின்னிவிட்டாற் போன்ற குழலையுடைய பெருங்கண்ணாளாம் பேதையின் ஊரை; துன்னினன் - (சுபத்திரன் தன் மனைவியைத் தேற்றுவித்துக் கொண்டிருக்கும் அவ்வளவிலே) அடைந்தனன்.

 

   (வி - ம்.) பொன்னிலம் - வானுலகம். காமவல்லி - கற்பகமரத்திற்படர்வதொரு பொன்னிறப் பூங்கொடி. பேதை : கேமசரி. குருசில் - தலைவன் : ஈண்டுச் சீவகன்.

( 46 )
1458 மல்லிகை மணங்கமழ் மாலை வார்குழற்
சில்சுணங் கிளமுலைச் சிறுமி தந்தையுஞ்
செல்வனைத் திருநகர்ச் சேட்பட் டானரோ
பல்கதிர் மணியொளி பரந்த பூணினான்.

   (இ - ள்.) பல்கதிர் மணியொளி பரந்த பூணினான் - பல கதிரையுடைய மணிகள் ஒளிரும் பரவிய பூணினான் ஆகிய; மல்லிகை மணம் கமம் மாலை வார்குழல் சில் சுணங்கு இளமுலைச் சிறுமி தந்தையும் - மல்லிகை மணம் வீசும் மாலையினையும் நீண்ட கூந்தலையும் சிலவாகிய தேமல் பரவிய இளமுலையினையும் உடைய கேமசரியின் தந்தையும்; செல்வனை - சீவகனை; திருநகர்ச் சேண் பட்டான் - கேமமா புரத்திலே எதிர்ப்பட்டான்.

 

ணுறும் - நாளைக்கே வந்து எதிர்ப்படுவான்; நீ கவல வேண்டா - இனி நீ சிறிதும் வருந்தல் வேண்டா (என்று ஆற்றுவித்தான்).

 

   (வி - ம்.) இவளை நுகர்தற்குரியோன் தவத்தின் மிக்கோனும் ஆரழகுடையோனும் காதலானும் நம்பியுமாக இருத்தல் ஒருதலை என்பான், ஆரழகுடைய நம்பி காதலான் தவத்தின் மிக்கான் என்றான்.

 

   அத்தகைய தவம் வீண்போகாது என்பான் நாளைக் கண்ணுறும் என்றான். ஆங்கு : அசைச்சொல். ஊதுமே : ஏ : வினா. ஒன்றே : ஏ : தேற்றம்.

( 45 )

வேறு

 
1457 பொன்னிலத் தெழுந்ததோர் பொருவில் பூங்கொடி
மின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள்
பின்னிவிட் டனகுழற் பெருங்கட் பேதையூர்
துன்னினன் றொடுகழற் குருசி லென்பவே.