| கேமசரியார் இலம்பகம் |
826 |
|
|
|
(வி - ம்.) இது முதல் ஆறுபாட்டுக்கள் சீவகன் உருவச் சிறப்புக் கூறுகின்றன. ஆலமர நீழலில் இருந்த சீவகனைச் சுபத்திரன் கண்டு மனத்திடை இவ்வாறு சிந்திக்கிறான்.
|
|
|
கண்ணின் வண்ணம் தாமரை வண்ணம் என வண்ணத்தைத் தாமரையோடுங் கூட்டுக.
|
( 49 ) |
| 1461 |
குறங்கணி மயிலொடு கோல மார்ந்தன | |
| |
பிறங்கிய வுறுப்பின்மேற் பெரிய நோக்கின | |
| |
கறங்கிசை மணிமுழா வெருத்தங் காண்டகு | |
| |
மறங்கெழு பெரும்புலி வாயின் வண்ணமே. | |
|
|
(இ - ள்.) குறங்கு அணி மணிரொடு கோலம் ஆர்ந்தன - துடைகள் அழகிய மயிருடன் அழகு பொருந்தினவாகி; பிறங்கிய உறுப்பின் மேல் பெரிய நோக்கின - பருத்த உறுப்புக்களைக் காட்டிலும் சிறப்புறும் அழகுடையன; எருத்தம் கறங்கு இசை மணி முழா - பிடரி ஒலிக்கும் இசையையுடைய அழகிய முழவை ஒக்கும்; வாயின் வண்ணம் மறம் கெழு பெரும்புலி - வாயின் அழகு வீரம் பொருந்திய பெரிய புலியின் வாயை ஒக்கும்.
|
|
|
(வி - ம்.) கோலம் - அழகு, நோக்கு - அழகு; ”நோய் இகந்து நோக்கு விளங்க” எனவரும் மதுரைக்காஞ்சியினும் அஃதப்பொருட்டாதல் உணர்க. பிறங்குதல் - பருத்தல். கறங்கிசை: வினைத்தொகை. மணி முழா என்றது குடமுழவினை. புலியின் வாய் சிறுகி வளைந்திருத்தலின் உவமையாக எடுத்தோதினர்.
|
|
|
வாயின் வண்ணம் புலிவாய் வண்ணம் என்க.
|
( 50 ) |
| 1462 |
வரையகன் மார்பிடை வரியு மூன்றுள | |
| |
புரைதபு பொன்புரை நாவு முள்ளுடைத் | |
| |
தருவரைத் தோள்களு மமரர் கோன்களிற் | |
| |
றுருவுகொ டடக்கையி னுருவு கொண்டவே. | |
|
|
(இ - ள்.) வரை அகல் மார்பிடை வரியும் மூன்று உள - மலையைப் போன்று அகன்ற மார்பிலே வரிகளும் மூன்றுள்ளன; புரைதபு பொன்புரை நாவும் முள் உடைத்து - குற்றம் அற்ற பொன்னைப் போன்ற நாவும் சருச்சரையுடையதாயிருக்கும்; அருவரைத் தோள்களும் அமரர் கோன் களிற்று உருவுகொள் தடக்கையின் உருவு கொண்ட - அரிய வரையனைய தோள்களும் வானவர் கோனுடைய ஐராவதத்தின் அழகு கொண்ட துதிக்கையின் உருவத்தைக் கொண்டன.
|
|
|
(வி - ம்.) அகல் மார்புவரை அம்மார்பிடை என விரித்தோதி அகன்ற மார்பும் மலையை ஒக்கும் அம்மார்பினிடத்தே என்க.
|
|