| கேமசரியார் இலம்பகம் |
827 |
|
|
|
வரி - கோடு. ”அம்பகட்டு மார்பிற் செம்பொறி வாங்கிய மொய்ப்பின்” என்றார் திருமுருகாற்றுப்படையினும். இங்ஙனம் மூன்று கோடமைதல் உத்தம விலக்கணம் என்ப. அமரர்கோன் : இந்திரன். உருவிரண்டனுள் முன்னது அழகு, ஏனையது வடிவம்.
|
( 51 ) |
| 1463 |
இலங்குபொன் னிறுவரை யனைய வேந்தலுக் | |
| |
கலங்கிதழ்த் தாமரைக் கொட்டை யன்ன தாய் | |
| |
வலஞ்சுழிந் தமைவரக் குழிந்த வாய்ப்பொடு | |
| |
நலங்கிளர் நாபியு மினிது நாறுமே. | |
|
|
(இ - ள்.) இலங்கு பொன் இறுவரை அனைய ஏந்தலுக்கு - விளங்கும் பொன்னாகிய பெரிய மலையை ஒத்த தலைவனுக்கு; அலங்கு இதழ்த் தாமரைக் கொட்டை அன்னதாய் - விளங்கும் இதழையுடைய தாமரைப் பொகுட்டுப் போன்றதாய்; வலம் சுழிந்து அமைவரக் குழிந்த வாய்ப்பொடு - வலமாகச் சுழிந்து பொருந்துதல் வரக் குழிந்த இயல்போடு; நலம் கிளர் நாபியும் இனிது நாறும் - அழகு விளங்கும் நாபியும் நன்றாகத் தோன்றும்.
|
|
|
(வி - ம்.) இறுவரை - பெரிய மலை. பொன் இறுவரை என்றது, மேருமலையினை. நாபி - உந்தி. நாறுதல் - தோன்றதல். இனிது என்புழி இனிமைப் பண்பு கட்கினிமையைக் குறித்து நின்றது.
|
( 52 ) |
| 1464 |
தடித்திறை திரண்டுதம் மளவிற் கேற்றசூழ் | |
| |
கெடிற்றழ கழிப்பன கிளர்பொற் றோரைய | |
| |
கடிப்பகை நுழைவறக் கதிர்த்த கைவிர | |
| |
லடுத்தமூக் கருமணி வயிரத் தோட்டியே. | |
|
|
(இ - ள்.) தடித்து இறை திரண்டு கிளர் தோரையதடித்து வரிகள் திரண்டு விளங்கும் பொன்னிற மூங்கிலரிசி அனையவாய்; கடிப்பகை நுழைவு அறக் கதிர்த்த கைவிரல் - வெண்சிறு கடுகும் நுழைய இயலாதவாறு ஒளிசெயும் கைவிரல்கள்; தம் அளவிற்கு ஏற்ற - தம் அளவிற்குத் தகவான; சூல் கெடிற்று அழகு அழிப்பன - சூல் கொண்ட கெளிற்று மீனின் அழகைக் கெடுப்பன; அடுத்த மூக்கு அருமணி வயிரத் தோட்டி - முகத்திற்குப் பொருந்திய மூக்கும் வயிரத் தோட்டியை ஒக்கும்.
|
|
|
(வி - ம்.) இறை - விரலிலுள்ள கோடுகள். இலக்கண நூலிற் கூறப்பட்ட அளவிற்கு என்க. கெடிறு - கெளிறு; ஒருவகை மீன். பொன் தோரை - பொன்னிறமுடைய மூங்கில் நெல்; கடிப்பகை: ஐயவி - வெண் சிறு கடுகு. கடிப்பகையும் நுழைதற் கியலாதபடி இடைவெளியற இணைந்த என்பது கருத்து. கதிர்த்தல் - ஒளிவிடுதல். வயிரத்தோட்டி - வயிர மணியாற் செய்த தோட்டி (அங்குசம்.)
|
|
|
தோரைய என்னும் குறிப்பு வினைமுற்று வினையெச்சமாய், கதிர்த்த என்னும் பெயரெச்சத்தைக் கொண்டு அது கை விரல் என்பதைக் கொண்டது.
|
( 53 ) |