நாமகள் இலம்பகம் |
83 |
|
ஊசல்ஆட இட்டது ஊழ்திரள் மணிக்கயிறு - ஊசல்ஆட இட்டகயிறு ஒழுங்காகத் திரண்ட முத்துவடம்.
|
|
(வி - ம்.) கூந்தற் கமுகு: கூந்தற்பனைபோலக் கமுகல் ஒருவகை. கோழ் - கொழுவிய. மணிமடல்: மணி - நீலமணி. மணிக்கயிறு: மணி: ஈண்டு முத்து
|
( 118 ) |
148 |
மென்றி னைப்பி றங்கலும் மிளிர்ந்து வீழ ருவியும் |
|
குன்ற யன்ம ணிச்சுனைக் குவளை கண்வி ழிப்பவு |
|
நின்று நோக்கு மான்பினை நீல யானை மன்னவன் |
|
கன்று காமம் வெஃகிய காமர் காம பூமியே. |
|
(இ - ள்.) நீலயானை மன்னவன் கன்று காமம் வெஃகிய காமர் காமபூமி - கரிய யானையையுடைய வேந்தன் தழும்பேறிய காமத்தாலே விரும்பிய, காமனும் விரும்பும் நிலத்தில்; பிறங்கல் குன்று மென்தினையும் - திரண்ட செய்குன்றிலே மெல்லிய தினையையும், மிளிர்ந்து வீழ் அருவியும் - குதித்து விழும் அருவியையும்; மான்பிணை அயல் மணிச்சுனைக் குவளை கண்விழிப்பவும் - மானும் பிணையும் அயலில் உள்ள சுனையிற் குவளை காப்பார் கண்போல விழித்து நோக்கவும்; நின்று நோக்கும் - உண்பனவாக நின்று நோக்கும்.
|
|
(வி - ம்.) காமர் காமபூமி - காமனுக்கு விருப்பஞ் செய்யும் பூமி ; 'காமரை வென்ற கண்ணோன் ' (சிற். 164) போல.
|
|
(பிறங்கல் - திரள். இவற்றைச் சித்திரம் எனிற் கோயிற்கு அங்கமாகிய செய்குன்று கூறிற்றிலராவர்.
|
( 119 ) |
149 |
தீங்கு யின்ம ணந்துதேன் றுஞ்ச வண்டு பாண்செய |
|
வேங்கை நின்று பொன்னுகுக்கும் வெற்பு டுத்த சந்தன |
|
மோங்கு பிண்டி சண்பக மூழி நாறு நாகமு |
|
நீங்க நீங்கு மின்னுயிர் நினைப்பி னின்றி ளஃகுமே. |
|
(இ - ள்.) தீங்குயில் மணந்து, தேன் துஞ்ச, வண்டு பாண் செய - குயிலாகிய இனிய காளங் கூடித், தேனாகிய யாழ் தங்க, வண்டுகள் பாட; வேங்கை நின்று பொன் உகுக்கும் வெற்பு உடுத்த - அவற்றிற்குப் பரிசிலாக வேங்கை நின்று பொன்னைச் சொரியும், முற்கூறிய செய்குன்றைச் சூழ்ந்தவை; சந்தனம் ஓங்கு பிண்டி சண்பகம் ஊழி நாறும் நாகமும் - சந்தனமும் உயர்ந்த அசோகும் சண்பகமும் முறைமைப்பட மணங்கமழும் சுரபுன்னையும் ஆகும்; நீங்க இன்னுயிர் நீங்கும்- இவற்றை நீங்கின் இனிய உயிர் நீங்கும், நினைப்பின் நின்று இளகும் - நினைப்பின் உயிர் தளிர்க்கும்.
|
|