| கேமசரியார் இலம்பகம் |
830 |
|
|
| 1469 |
பூத்தொழியாப் பிண்டிக்கீழ்ப் பொங்கோத வண்ணனை | |
| |
நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலக நண்ணாரே | |
| |
வீட்டுலக நண்ணார் வினைக்கள்வ ராறலைப்ப | |
| |
வோட்டிடுப வெண்குணனுங் கோட்பட் டுயிராவே. | |
|
|
(இ - ள்.) பூத்து ஒழியாப் பிண்டிக் கீழ்ப் பொங்கு ஓதவண்ணனை - மலர்ந்து மாறாத பிண்டியின் கீழ் எழுந்தருளிய பொங்குங் கடல் வண்ணனை; நாத்தழும்ப ஏத்தாதார் வீட்டுலகம் நண்ணார் - நாவானது தழும்பு உறப்போற்றாதார் வீட்டையடையார்; வீட்டுலகம் நண்ணார் - அவ்வாறு வீட்டையார்; வினைக் கள்வர் ஆறு அலைப்ப - தீவினையாகிய கள்வர் வழிபறித்தலாலே; எண் குணனும் கோட்பட்டு உயிரா ஓட்டிடுப - எண் குணங்களும் கள்வராற் பற்றப்பட்டுப் பெருமூச்செறிந்து ஓடிடுவர்.
|
|
|
(வி - ம்.) 'ஓடிடுப' என்பது 'ஓட்டிடுப' என விகாரப்பட்டது. எண்குணம், வரம்பிலா அறிவு முதலிய பண்புகள். அருகனை வணங்காதார்க்கு நுகரப் பெறாமையால் உளதாம் பற்று ஒழிவின்றாய் வருவதன்றி, நுகர்ச்சி எய்திப் பற்றற்று வீடு பெறுதல் கூடாதாய் இருந்த தென்பது கருத்து. முன்னர் வணங்காமையின் தானும் இவ்வருத்தம் உற்றேன் என்றாள்.
|
|
|
இவை படர்க்கையாதலிற் பொருள் வேறுபட்டு வந்த தேவபாணிக் கொச்சக ஒருபோகு.
|
( 58 ) |
வேறு
|
|
| 1470 |
முத்துமிழு முந்நீர் மணிவண்ணன் மூன்றுலகும் | |
| |
பத்திமையாற் பாடப் படுவான்றாள் பாடக்கேட் | |
| |
டொத்தரம்பை யன்னா ளுவந்திவளொ டொப்பானோர் | |
| |
வித்தகனை யின்னே பெறுக வெனவுரைத்தாள். | |
|
|
(இ - ள்.) முத்து உமிழும் முந்நீர் மணிவண்ணன் - முத்துக்களைக் கொழிக்கும் கடல் நீர் போன்ற நீலவண்ணனும்; மூன்று உலகும் பத்திமையால் பாடப்படுவான் தாள் பாடக் கேட்டு - மூன்றுலகும் அன்பினாற் பாடப்படுவோனுமாகிய அருகன் தாளைக் கேமசரி பாடக் கேட்டு; அரம்பை அன்னாள் ஒத்து உவந்து - அரம்பையைப் போன்ற நிப்புதி தன் கருத்தும் தன் மகள் கருத்தும் ஒத்தலின் மகிழ்ந்து; இவளொடு ஒப்பான் ஓர் வித்தகனை - இவளழகுக்கு ஏற்றவனாகிய ஒரு வித்தகனை; இன்னே பெறுக என உரைத்தாள் - இப்போதே இவள் அடையவேண்டும் என்று இறைவனை பரவினாள்.
|
|
|
(வி - ம்.) முந்நீர் வண்ணன் மணிவண்ணன் எனத் தனித்தனி கூட்டுக முந்நீர் - மூன்று நீரையுடையது அல்லது மூன்று தொழிலையுடையது என்னும் பொருள்பட்டுக் கடலுக்காயிற்று.
|
|