பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 834 

1477 மங்கல வெள்ளை வழித்துமுத் தீர்த்தபின்
கொங்கலர் கோதையர் கொண்டக மெய்தி
யங்கதிர்ப் பொற்கலத் தாரமிர் தேந்தினர்
செங்கயற் கண்ணியர் சீரி னயின்றான்.

   (இ - ள்.) மங்கல வெள்ளை வழித்து முத்து ஈர்த்தபின் - (உண்ணுமிடத்தைச்) சந்தனத்தால் மெழுகி முத்தாலே கோலம் இட்டபிறகு; கொங்கு அலர் கோதையர் செங்கயற் கண்ணியர் கொண்டு அகம் எய்தி - தேனையுடைய மலர்க் கோதையராகிய கயற்கண்ணியர் அவனை அழைத்துச் சென்று உட்புகுந்து; அம்கதிர்ப் பொற்கலத்து ஆர் அமிர்து ஏந்தினர் - அழகிய ஒளிமிகும் பொற்கலத்திலே சிறந்த அடிசிலை ஏந்தினர்; சீரின் அயின்றான் - அவனும் அவர் புகழ்ச்சியுடன் உண்டான்.

 

   (வி - ம்.) வெள்ளை - சந்தனத்தில் ஒருவகை. இது வெண்ணிறமுடைமையின் மங்கலப் பொருளாகவும் மதிக்கப்படும். முத்தும் மங்கலங்கருதிக் கூறப்பட்டது.

( 66 )
1478 பத்தியிற் குயிற்றிய பைம்பொற் றிண்ணைமேற்
சித்திரத் தவிசினுட் செல்வன் சீர்பெற
நித்தில மணியுறழ் கரக நீரினா
லத்துறை விடுத்தன னலர்ந்த தாரினான்.

   (இ - ள்.) பத்தியில் குயிற்றிய பைம்பொன் திண்ணைமேல் சித்திரத் தவிசினுள் - பத்தியாகச் செய்யப்பட்ட பசும்பொன் திண்ணையின் மேல் ஓவியத் தொழில் கொண்ட இருக்கையிலே; அலர்ந்த தாரினான் செல்வன் - மலர்ந்த மாலையான் ஆகிய சீவகன் (அமர்ந்து); நித்தில மணி உறழ் கரக நீரினால் - முத்தாகிய மணியைப்போன்ற கரகத்திலிருந்து வார்த்த நீரைக்கொண்டு; சீர்பெற அத்துறை விடுத்தனன் - ஒழுங்காகப் பூசுதற்குரிய தொழில்களையெல்லாம் முடித்துவிட்டான்.

 

   (வி - ம்.) திண்ணைமேல் இடப்பட்ட தவிசினுள் இருந்து என்க. அத்துறை - உண்ணுதலாகிய அத்துறை என்க.

 

   கரகம் : கெண்டிகை.

( 67 )
1479 இளிந்தகாய் கமழ்திரை வாச மீண்டியோர்
பளிங்குபோழ்ந் தருகுபொன் பதித்த பத்தியின்
விளிம்புமுத் தழுத்திய யவனக் கைவினைத்
தெளிந்தபொன் னடைப்பையுட் பாகு சென்றவே.

   (இ - ள்.) ஓர் பளிங்கு போழ்ந்து - ஒரு முழுப் பளிங்கை அறுத்து; அருகு பொன் பதித்த பத்தியின் - அதன் பக்கத்தே