பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 835 

பொன்னிடப்பட்ட பத்தியிலே; விளிம்பு முத்து அழுத்திய - விளிம்பில் முத்துக்களை அழுத்திய; யவனக் கைவினைத் தெளிந்த பொன் அடைப்பையுள் - யவனத் தச்சர் கைவினையுடைய தெளிந்த பொன் அடைப்பையிலே; இளிந்த காய் கமழ் திரைவாசம் பாகு ஈண்டிச் சென்ற - இணுங்கின காயும் மணங்கமழ் வெற்றிலையும் முகவாசமும் தனிப்பாகும் சென்றன.

 

   (வி - ம்.) இணுங்குதல் - பறித்தல். காய் - பாக்கு. திரை - வெற்றிலை. பவனம் - அந்நாட்டுக் கம்மியர்க்கு ஆகுபெயர். அடைப்பை - வெற்றிலை முதலியன இட்டுவைக்கும் பை.

 

   ஒரு பளிங்கையறுத்தப் பொன்னை விளிம்பிற் பதித்த அடைப்பையில் இணுங்கின காயும் வெற்றிலையும் பார்வைக்குச் சென்றன என்றும், யவனக் கைவினைபெற்ற முத்தழுத்திய பொன்னடைப்பையிலே பாக்கும் வெற்றிலையும் முகவாசமும் ஈண்டித் தின்றற்குச் சென்றன என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பார். ஒன்றாக உரைப்பாருமுளரென்றார்.

( 68 )
1480 பாசிலை சுருட்டுபு கறித்துப் பல்லினைத்
தேசிகம் படத்துடைத் துமிழ்ந்து தேங்கமழ்
வாசம்வாய்க் கொண்டனன் மணிசெய் குண்டலம்
வீசிவில் விலங்கிவிட் டுமிழ வென்பவே.

   (இ - ள்.) மணிசெய் குண்டலம் வீசி வில் விலங்கி விட்டு உமிழ - மணியாற் செய்த குண்டலம் ஒளியைக் குறுக்கிட்டு உமிழும்படி; பாசிலை சுருட்டுபு கறித்து - வெற்றிலையைச் சுருட்டிக் கறித்து; பல்லினைத் தேசிகம் படத்துடைத்து உமிழ்ந்து - (அதன் குறையாலே) ஒளியுண்டாகப் பல்லைத்துடைத்து அதனை உமிழ்ந்து; தேன்கமழ் வாசம் வாய்க்கொண்டனன் - இனிமை கமழும் வெற்றிலை முதலிய முகவாசத்தை உட்கொண்டான்.

 

   (வி - ம்.) வெற்றிலையை முன்னிட்டுப் பின் பிளவை மெல்லுதல் வேண்டும் என்பது ஒரு விதி.

 

   கறித்து - மென்று; இக்காலத்தே கடித்து என வழங்குவர். மெல்லுங்காற் குண்டலம் அசைதல் இயல்பாதலுணர்க.

 

   தேசு - தேசிகம் எனத் திரிந்தது.

( 69 )
1481 பண்ணுலாங் கிளவிதன் பரவை யேந்தல்குல்
வண்ணமே கலையிவை வாய்ந்த பூந்துகி
லுண்ணிலாய்ப் பசுங்கதி ருமிழ்வ பாவியேன்
கண்ணையு மனத்தையுங் களங்கொண் டிட்டவே.

   (இ - ள்.) பண்உலாம் கிளவிதன் பரவை ஏந்து அல்குல் வண்ணமேகலை இவை - பண்ணொத்த கிளவியாளுடைய பரப்பு