பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 836 

டைய ஏந்திய அல்குலும் வண்ணமுறும் மேகலையும் ஆகிய இவை; வாய்ந்த பூந்துகில் உள் நிலாய்ப் பசுங்கதிர் உமிழ்வ - பொருந்திய அழகிய துகிலின் உள்ளே நிலைபெற்று நின்று புத்தொளி உமிழ்வன; பாவியேன் கண்ணையும் மனத்தையும் களம் கொண்டிட்ட - பாவியேனுடைய கண்ணையும் மனத்தையும் தமக்கு இருப்பிடமாகக் கொண்டுவிட்டன.

 

   (வி - ம்.) உலாம் : உவமப்பொருட்டு. கிளவி : கேமசரி. பரப்புடையதாய் ஏந்திய அல்குல் என்க. அல்குல் முதலியன பூந்துகிலுள் இருப்பனவாகவும் என் கண்ணினும் மனத்தினும் இருந்தன, இஃதொரு புதுமை என்று வியந்தபடியாம்.

 

   இது முதல் 'கலைத்தொகை' (சீவக - 1488) வரை சீவகன் கேமசரியை நினைத்து வருந்துதல் கூறப்படும்.

( 70 )
 

   (இ - ள்.) மெய்யெலாம் கடிகமழ் குழலினால் கட்டி - என் மெய்யையெல்லாம் மணம்கமழும் தன் குழலினாலே கட்டி; நடு ஒசி நோன்சிலைப் புருவத்தால் புடைத்து - நடு வளைந்த வலியவில்லாகிய தன் புருவததாலே அடித்து; அடும் மலர் நெடுங்கணால் ஆவி போழ்ந்திடா - வருத்தும் மலரனைய நீண்ட கண்களால் உயிரைப் பிளந்திட்டு; கொடியவள் இளமுலை கொல்லும் - கொடியவளுடைய இளமுலைகளாகிய யானை என்னைக் கொல்லும் கொல்லும்.

 

   (வி - ம்.) முலை தான் வருத்தலுடைமையின் தானும் வினைமுதலாம். புருவத்தாற் புடைத்துக் கண்ணால் ஆவிபோழ்ந்திடாத கொடியவள் தன் குழலாலே கட்ட முலைகொல்லும்என முடிப்பர் நச்சினார்க்கினியர். இவையெலாம் வருத்துகின்றனவே யாதலின் புருவத்தையுங் கண்ணையுந் தீங்கு செய்யாதனவாகக் குறிப்பிடுதலிற் போதிய பயனின்றாம். போழ்ந்திடா - போழ்ந்திட்டு : செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

( 71 )
 

   (இ - ள்.) கடியன - இயல்பாக மணமுடையனவாய்; கச்சினால் கட்டப்பட்டன - கச்சினாற் கட்டப்பட்டனவாய்; கொடியன - எழுது கொடி உடையனவாய்; குங்குமம் கொட்டப்பட்டன -