| கேமசரியார் இலம்பகம் |
839 |
|
|
|
வைப்ப; (இவ்விடையீட்டாலே வெளியே நின்று கொல்லமுடியாமல், உள்ளே நின்று); ஆள் செற்று - ஆளைச் செறுத்து; அழன்று - நோக்கி உள்ளம் அழன்று; கண் கரிந்த - கண் கருகின.
|
|
|
(வி - ம்.) ஒழிந்தவை - இம்முலைகள் ஒழிந்த ஏனையுறுப்புகள். ஏனையுறுப்புக்களினும் மிக்கு வருத்துகின்றமையால் கொடா மிகு - மீளிமை என்றார். நகுகொடா - நகுதற்கு இடங்கொடாத எனினுமாம்.
|
|
|
சூட்டுதலாலும் எழுதுதலாலும் முகபடாம் வைத்தலாலும் மீளிமை தீர்த்து மறைத்தலான் வெளியே நின்று கொல்லமாட்டாமல் உள்ளேயிருந்தே அழன்று கண்கரிந்தன என்பது கருத்து.
|
|
|
மீளிமை - கொங்கையின் வலி : பன்னீராண்டும் சென்று முலை முதிர்தலின் கண் கருகின என்றார்.
|
( 75 ) |
| 1487 |
தேன்கறி கற்ற கூழைச் | |
| |
செண்பக மாலை வேற்க | |
| |
ணூன்கறி கற்ற கால | |
| |
னொண்மணித் தடக்கை வைவேல் | |
| |
கூன்பிறை நுதலோர் கூற்றங் | |
| |
குவிமுலை நமன்கைப் பாசம் | |
| |
யான்பிற னளியன் வாழ்வா | |
| |
னாசைப்பட் டிருக்கின் றேனே. | |
|
|
(இ - ள்.) தேன்கறி கற்ற கூழைச் செண்பகமாலை வேற்கண் - வண்டுகள் உண்ணக் கற்ற கூந்தலையுடைய கேமசரியின் கண்கள்; ஊன்கறி கற்ற காலன் தடக்கை ஒண்மணி வைவேல் - ஊனைத் தின்னக் கற்ற, காலனுடைய பெரிய கையிலுள்ள ஒள்ளிய மணியிழைத்த கூரிய வேலாகும்; கூன் பிறை நுதல் ஓர் கூற்றம் - வளைந்த பிறை அனைய புருவம் ஒப்பற்ற காலனேயாகும்; குவிமுலை நமன்கைப் பாசம் - குவிந்த முலைகள் நமன் கையில் உள்ள பாசம்; வாழ்வான் ஆசைப்பட்டிருக்கின்றேனே - (இங்ஙனமாகவும்) உயிர் வாழ ஆசைகொண்டுள்ளேனே ஆதலின்; யான் பிறன் அளியன் - யான் மக்களிடையுள்ளே னல்லேன்; இரங்கத்தக்கேன்.
|
|
|
(வி - ம்.) செண்பகமாலை என்றது கேமசரி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. வேற்கண் என்புழி அடை மொழி உவமங்குறியாமல் வாளா நின்றது.
|
|
|
இனிக் குவிமுலை என்பதனைப் பெயராக்கிக் குவிமுலையின் கூழைச் செண்பகமாலை கைப்பாசம், கண் கை வேல் எனினுமாம்.
|
|
|
இருக்கின்றேனே : ஏ : தேற்றம். கூற்றம், நமன் என்பன சுட்டுப்பெயர். இனி, காலன் கூற்றத்திற்கு ஏவல் செய்பவனுமாம்.
|
( 76 ) |