பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 841 

கேமசரி வருத்தம் 'கண்ணுற' 'நல்வள' (சீவக. 1472, 1474) என்பனவற்றிற் கூறினார்.

 

   அரசனுந் தானும் நெருங்கிய கேண்மையுடையர் ஆதலின் அவனுக்கும் ஏனையோக்கும் அறிவித்தான் என்பது கருத்து.

 

   மன்னவன் என்புழி நான்கனுருபோடு உம்மையும் நிலத்தவர்க்கு என்புழி உம்மையும் செய்யுள் விகாரத்தாற் றொக்கன.

( 78 )
1490 இடியுமி ழெறிதிரை முழக்கிற் பல்லியங்
கொடியணி வியனகர்க் குழுமி யார்த்தெழக்
கடிமண மியற்றினார் கடவு ணாளினால்
வடிமலர்க் கோதையை மைந்தற் கென்பவே.

   (இ - ள்.) கொடி அணி வியன் நகர் - கொடி அணிந்த பெரு நகரில்; கடவுள் நாளினால் - நல்லநாளிலே; மைந்தற்கு வடிமலர்க் கோதையை - சீவகனுக்குக் கேமசரியை; இடி உமிழ் எறி திரை முழக்கில் - இடியுமிழ் ஒலியும் வீசும் அலைகடல் முழக்கும்போல; பல்இயம் குழுமி ஆர்த்து எழ - பல திருமண இயங்கள் திரண்டொலிக்க; கடிமணம் இயற்றினார் - திருமணம் புரிவித்தனர்.

 

   (வி - ம்.) இடியுமிழ் முழக்குப்போலவும் திரைமுழக்குப் போலவும் பல்லியம் ஆர்த்தெழ என்க.

 

   பல்லியம் - பலவாகிய இசைக்கருவிகள். கடவுள் நாள் - கடவுட்டன்மையுடைய நன்னாள்.

( 79 )
1491 மணிக்குட மழுத்திவைத் தனைய தோளினான்
கணிக்கிடங் கொடாநலங் கதிர்த்த காரிகை
யணிக்கிட னாயி வரிவை தன்னொடும்
பிணித்திடை விடாதவன் பெற்ற வின்பமே.

   (இ - ள்.) மணிக்குடம் அழுத்திவைத்த அனைய தோளினான் - மணியாற் செய்த குடத்தை அழுத்திவைத்தாற் போன்ற தோளையுடைய சீவகனின்; கணிக்கு இடம் கொடாநலம் - வடிவிற்குக் கூறிய நூல் வல்லாற்கும் புகழ இடங்கொடாத நலத்தை; அணிக்கு இடன் ஆகிய அரிவை கதிர்த்த காரிகை தன்னொடும் - அணிகட்கு இடம்பெற்ற கேமசரியின் ஒளிரும் அழகுடனே ; பிணித்து - அவர்கள் பிணித்தலால்; அவன் பெற்ற இன்பம் இடைவிடாது - அவன் நுகர்ந்த இன்பம் நீங்காதாயிற்று.

 

   (வி - ம்.) கணி - கணிவன், கதிர்த்தல் - ஒளிர்தல். காரிகை - அழகு. பிணித்து என்ற செய்தெனெச்சத்தை பிணிப்ப எனச் செயவெனெச்சமாக்கி ஏதுப்பொருட்டாக்குக.

( 80 )