| கேமசரியார் இலம்பகம் |
842 |
|
|
| |
|
(இ - ள்.) பூந்துகில் பொருதிரை - அழகிய ஆடை மறி தரும் அலையாக; பொம்மல் வெம்முலை ஏந்திய மணிவரை - பெரிய விருப்பூட்டும் முலை ஏந்திய மலையாக; இரக்கம் நீர்த்தரங்கு - தன் அருள் நீரின் அசைவாக; ஆய்ந்த வன்தோள் இணை நாகம் ஆக - ஆராய்ந்த வலிய இரு தோள்களும் பாம்பாக; வைத்து - வைத்து; அக்கடல் அவற்கு அமுதம் ஈந்தது - அக்காமக்கடல் அவனுக்கு அமுதத்தைக் கொடுத்தது.
|
|
|
(வி - ம்.) வரை - மந்தரம். அருள் நெகிழ்தலுண்மையின் நீரின் அசைவு என்றார். நாகம் - வாசுகி. கடல் - பாற்கடல். அவன் கடைதலின் என ஒரு சொல் வருவித்துக்கொள்க.
|
|
|
இவற்றால் முயக்கமும் இதழ்பருகலும் கூறினார். அவன் காட்ட அவள் காண்டலின் 'அவற்கு' என அவன்மேல் ஏற்றினார்.
|
( 81 ) |
| |
|
(இ - ள்.) மைந்தன தார் சந்தனச் சேற்றிடைக் குழைந்து உடைய - சீவகனுடைய தார் அவன் மார்பிலே சந்தனச் சேற்றின் இடையே குழைந்து உடையும்படி; தாமவார்குழல் பைந்தொடி படாமுலை குளிப்பப் பாய்தலின் - மலர்மாலையணிந்த நெடிய கூந்தலையும் பசிய தொடியையும் உடைய கேமசரியின் தளராத முலைகள் முழுகுமாறு பாய்தலால்; வாய்திறந்து அம்சிலம்பு அல்குல் அணி கலையொடு ஆர்த்த - வாய்விட்டு அழகிய சிலம்பும், அல்குலில் அணிந்த மேகலையும் ஆர்த்தன.
|
|
|
(வி - ம்.) இச்செய்யுள் கேமசரியின் முயக்கங் கூறிற்று. தார் குழைந்துடைய என்பதற்குத் தூசிப்படை உடைய என்றும் ஒரு பொருள் தோன்றிற்று; யானை பாய்தலின் தூசிப்படை சேற்றிலே உடைந்தது என்றும், அதற்குச் சிலர் ஆர்த்தனரென்னும் ஒரு பொருள் தோன்றிற்று என்றும் நச்சினார்க்கினியர் நுண்ணிதிற் கூறினர்.
|
|
|
காமக்கடல், அழகிய உடையாகிய அலைமோதவும், கேமசரியின் முலையாகிய மலையிற் சீவகன் தோள்களாகிய பாம்புக் கயிறு பூட்டியிழுத்துக் கடையும்போது அவனுக்கு இன்பமாகிய அமுதத்தைக் கொடுத்தது என்க.
|
|
|
தார் - தூசிப்படை.
|
( 82 ) |