| கேமசரியார் இலம்பகம் |
845 |
|
|
|
(இ - ள்.) காஞ்சனக் காய்க் கமுகு - பொன்னிறக் காய்களையுடைய கமுகும்; பொன் கனிக்குலை வாழை - பொன் போலும் கனிகளையுடைய குலை பொருந்திய வாழையும்; சூழ்ந்து - சூழப்பெற்று; பூஞ்சினை நாகம் தீம்பூ மரம் கருப்பூரச் சோலை - தன்னிடத்தே மலர்க் கிளைகளையுடைய சுர புன்னை மரமும் தீம்பூ மரமும் பொருந்திய கருப்பூரச் சோலையிலே; மாஞ்சினை மயில்கள் ஆட - மாமரக் கிளைகளிலே மயில்கள் ஆட; சண்பக மலர்கள் சிந்தும் - சண்பகப் பூக்கள் சிந்துகின்ற; தீஞ்சுனை அருவிக் குன்றம் - இனிய சுனையையுடைய குன்றிலே; சீர்பெற ஏறினான் - சிறப்புற ஏறினான்.
|
|
|
(வி - ம்.) காஞ்சனம் - பொன்; கமுகங்காய்க்கு நிறம் பற்றி வந்தது. பொன்கனி - பொன்போலும் நிறமுடைய பழம்.
|
|
|
தீம்பூ மரம் : ஒருவகை மரம் (சீவக. 1267, 1901).
|
( 86 ) |
| 1498 |
தினைவிளை சாரற் செவ்வாய்ச் | |
| |
சிறுகிளி மாத ரோப்பப் | |
| |
புனைவளைத் தோளி சொல்லைக் | |
| |
கிளியெனக் கிள்ளை போகா | |
| |
நனைவினை கோதை நாணிப் | |
| |
பொன்னரி மாலை யோச்சக் | |
| |
கனைகழற் குருசி னண்ணிக் | |
| |
கவர்கிளி யோப்பி னானே. | |
|
|
(இ - ள்.) தினைவிளை சாரல் - (அம்மலையில்) தினை விளைந்த புனத்திலே; செவ்வாய்ச் சிறு கிளி மாதர் ஒப்ப - சிவந்த வாயையுடைய சிறிய கிள்ளைகளைக் கேமசரி ஓட்ட; புனை வளைத்தோளி சொல்லைக் கிளியெனக் கிள்ளை போகா - அழகிய வளைத்தோளியின் மொழியைக் கிளிமொழியென உட்கொண்டு கிள்ளை போகாவாக; நனைவிளை கோதை நாணிப் பொன்னரிமாலை ஓச்ச - (அதற்கு) தேன்விளையும் கோதையாள் நாணுற்றுப் பொன்னரி மாலையால் துரப்பப் (பின்னும் போகாவாக); கனைகழற் குருசில் நண்ணிக் கவர்கிளி ஓப்பினான் - (அவள் கருத்தை முடித்தற்கு) ஒலிக்குங் கழலணிந்த சீவகன் சென்று தினையைக் கவரும் அக்கிளிகளை ஓட்டினான்.
|
|
|
(வி - ம்.) அப்புனைவளைத் தோளியின் சொல்லை என்க.
|
|
|
கோதை : கேமசரி. குரிசில் : சீவகன். கவர்கிளி : வினைத்தொகை; தினைக் கதிரைக் கவர்கின்ற கிளி என்க. ஒப்புதல் - ஒட்டுதல். கேமசரி சொற்கேட்டுக் கிளி போகாதது கண்டு சீவகனே அக் கிளிகளை யோட்டினான் என்பது.
|
( 87 ) |