பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 847 

யெலாம் வென்ற; பைங்கிளி மழலைத் தீஞ்சொல் - கிளியின் மழலையனைய இன்மொழியுடைய; வாணிக மகளிர் தாம் வாணிகம் வல்லர் என்னா - வணிகப் பெண்கள் முதல் கெட ஊதியஞ் செய்யார் என்று வியந்து; பூண்முலை பொதிர்ப்பப் புல்லிப் புனைநலம் பருகினான் - அவளுடைய பூணணிந்த முலைகள் விம்மத் தழுவிப் புனைவுற்ற அழகினைப் பருகினான்.

 

   (வி - ம்.) இவன் இறந்து படுவேனோ என்றதனைக் கேட்டுக் குறுமுறுவல்கொண்டு ஒரு மொழி கொடுப்பவே. ஊடல் நீங்கியதாகலின், அச் சொல்லை மழலைத் தீஞ்சொல் என்று மகிழ்ந்தான். அம் மொழி கூறலாகாமையின் ஆசிரியர் கூறிற்றிலர் என்ப. முதல் - தன் உயிர். ஊதியம் - ஊடல்.

 

   வீணையும் யாழும் என வேறு கொண்டுரைப்பதும் உண்டு என்பதைக், 'குழலும் வீணையும் யாழுமென்றினையன குழைய' (கம்ப. ஊர் தேடு.6) என்பதனாலும் அறிக.

( 89 )
1501 திங்களங் குழவி செவ்வா
  னிடைக்கிடந் திமைப்ப தேபோற்
குங்கும மார்பிற் பூண்ட
  மங்கையோ டிருந்த போழ்தோர்
வாளொளித் தடங்க ணீலம்
  மணிவண்டு கண்டு சொன்னான்
கங்குறா னீங்க லுற்றுக்
  கமழ்மல ரணிந்த தாரான்.
திருத்துயில் பெற்ற மார்பன்
  றிருந்துதா ருழக்க வின்ப
வருத்தமுற் றசைந்த கோதை
  வாளொளித் தடங்க ணீலம்
பொருத்தலும் பொன்ன னாளைப்
  புறக்கணித் தெழுந்து போகிப்
பருச்சுடர்ப் பவழ நோன்றாழ்ப்
  பன்மணிக் கதவு சோ்ந்தான்.

   (இ - ள்.) திங்கள் அம் குழவி செவ்வானிடைக் கிடந்து இமைப்பதே போல் - பிறைத் திங்கள் செவ்வானிலே கிடந்து விளங்குவதுபோல; குங்குமம் மார்பில் பூண்ட குளிர்கதிர் ஆரம்மின்ன - தனது குங்குமம் அணிந்த மார்பிலே பூண்ட தண்ணிய கதிர் வீசும் முத்துமாலை மின்னும்படி; மங்கையோடு இருந்த போழ்து - தனித்துக் கேமசரியுடன் இருந்த பொழுதில்; கமழ் மலர் அணிந்த தாரான் - மணமலர் புனைந்த தொடையினான்; ஓர் மணி வண்டு கண்டு - ஒரு கரிய வண்டைப் பார்த்து; கங்குல் தான் நீங்கல் உற்று - இரவு பிரியக் கருதி; சொன்னான் - ஒரு மொழி கூறினான்.

 

   (வி - ம்.) இதன்கண் சீவகன் கேமசரிக்குத் தான் பிரியக் கருதியிருப்பதனைக் குறிப்பால் உணர்த்துகின்றான்.

( 90 )
1502 மணிவண்டிம் மாதர் கோதை
  மதுவுண வந்த போழ்தங்
கிணைவண்டங் கிறந்து பாடின்
  றிருக்குமே யிரங்க லின்றாய்த்