பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 848 

1502 துணைவண்டு துஞ்சி னீயுந்
  துஞ்சுவை யென்று நின்கட்
பணிகொண்ட தின்மை யாற்றான்
  பரிவொடு மிருக்கு மன்றே.

   (இ - ள்.) மணி வண்டு - கரிய வண்டே!; இம் மாதர் கோதை மதுஉண வந்த போழ்து - நீ இம் மாதரின் மலர்மாலையிலே தேனைப் பருக வந்தபோது; அங்கு இணை வண்டு அங்கு இறந்துபாடு இன்று இரங்கல் இன்றாய் இருக்குமே - அங்குள்ள நின் பெடை வண்டு அங்கேயே இறவாமலும் வருத்தம் இன்றியும் இருக்குமோ?; துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை என்று - நின் பெடை இறப்பின் நீயும் இறந்துபடுவாயென்று உட்கொண்டு; நின்கண் பணிகொண்டது இன்மையால் தான் - உன்னிடத்து உரியதொரு தொழிலை முதலிலேயே தன்னிடத்துக் கொள்ளாமையால்; பரிவொடும் தான் இருக்கும் அன்றே - இறந்துபடாமல் அன்புடனே தான் ஆற்றியிருக்கும் அல்லவோ? (என்றான்)

 

   (வி - ம்.) 'துணைவண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை என்று' என்றது என் பொருட்டே நீ ஆற்றியிருத்தல் வேண்டும் என்னும் குறிப்புடையது.

 

   மணிவண்டு : அண்மைவிளி. இருக்குமே : ஏ : வினா. பணி யென்றது, மகளிர் இருந்து இல்லறத்தை நிகழ்த்துதற்கு வேண்டுவன தேடிவருதல் ஆடவர்க்குப் பணியாதலை.

( 91 )
1503 குழவியாய்ப் பிறந்து வெய்யோன்
  குமரனாய் குறுகி யிப்பால்
விழைவுதீர் கிழவ னாகி
  விழுக்கதி ருலந்து வீழ
மழலைவண் டுழல நக்க
  மல்லிகை யலங்கல் சூட்டிக்
குழல்புரை கிளவி யோடுங்
  கொழும்புகை யமளி சோ்ந்தான்.

   (இ - ள்.) வெய்யோன் குழவியாய்ப் பிறந்து - கதிரவன் காலையிற் குழவியாகத் தோன்றி; குமரனாய் முறுகி - நண்பகலிற் குமரனாகிய வெம்மை மிகுந்து; இப்பால் விழைவு தீர் கிழவன் ஆகி - மாலையில் ஆசை நீங்கிய முதியவனாகி; விழுக்கதிர் உலந்து வீழ - சிறந்த கதிர்கள் கெட்டு மேற்றிசையிலே விழுதலின்; மழலை வண்டு உழல நக்க மல்லிகை அலங்கல் சூட்டி - (சீவகன்) முரலும் வண்டு உழலும்படி அலர்ந்த மல்லிகை மாலையைச் சூட்டி; குழல் புரை கிளவியோடு கொழும் புகை அமளி சேர்ந்