பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 85 

சென்னி பந்து அடிப்பன - அரசன் வெகுண்ட பகைமன்னரின் தலையைப் பந்தாடுவனவாகிய ; ஊற்று இருந்த மும்மதத்து ஓடை யானை - ஊற்றெடுக்கும் மும்மதத்தையும் முகபடாத்தையும் உடையனவாகிய யானைகளும்; பீடுசால் காற்று இயல் புரவி தேர் கலந்து - காற்றைப்போல ஓடும் புரவியுந் தேரும் கூடி; கவ்வை மல்கின்று - ஒலிமிக்கது அவ்விடம்.

 

   (வி - ம்.) கூற்றம் யானைக்குவமை.

 

   முற்செய்யுளில் மகளிர் பந்தாடுதலின்பம் கூறிய ஆசிரியர் அந்நினைவினாலே இதன்கண்ணும் ”ஊற்றிருந்த மும்மதத் தோடையானை கூற்றமன்ன கூர் நுதிக் குருதிவான் மருப்பிடைச் சீற்றமுற்ற மன்னர்தஞ் சென்னி பந்தடிப்பன” என்றார்.

 

   இவை அரசன் ஏறுவன ஆதலின் உள்நிற்றல் இயல்பு.

( 123 )
153 கவ்வையங் கருவி சூழ்ந்து கண்ப டுக்கு மாடமுந்
தெவ்வர் தந்த நீணிதி சோ்ந்த செம்பொன் மாடமு
மவ்வலங் குழலி னார்ம ணிக்க லம்பெய் மாடமு
மிவ்வ லந்த வல்லவு மிடங்க ளெல்லை யில்லையே.

   (இ - ள்.) கவ்வை அம்கருவி சூழ்ந்து கண் படுக்கும் மாடமும் - (மனச் செருக்கால்) ஆரவாரமுடைய வீரர் திரள், அரசன் பகையை மனத்தால் நோக்கி, யாமந்தோறுங் காத்துத் துயில் கொள்ளும் மாடமும்; தெவ்வர் தந்த நீள்நிதி சேர்ந்த செம்பொன் மாடமும் - பகைவர் கொடுத்த பெருஞ்செல்வம் இருக்கும் பொன்மாடமும்; மவ்வல் அம் குழலினார் மணிக்கலம் பெய்மாடமும் - முல்லையங் சூழலினார் தம் அணிகலன்களை இட்டிருக்கும் மாடமும்; இவ் வலந்த அல்லவும் - ஆகிய இங்குக் கூறப்பட்ட இடங்களும் பிற படைக்கலம் வைக்கும் இடம் முதலியனவும்; இடங்கள் எல்லை இல்லை - ஆகிய இடங்கள் அளவற்றவை.

 

   (வி - ம்.) கருவி - தொகுதி; ஈண்டு ஆகுபெயர் ; வீரர்களை உணர்த்தியதால். இனி, பகைவர்க்குக் கவ்வையைச் செய்தலையுடைய ஆயுதங்கள் சூழ்ந்து நோக்கினார் கண்ணை அகப்படுக்கும் ஆயுதசாலை என்னும் இப்பொருளே சிறப்புடையது. கவ்வை - துன்பம்.

( 124 )
154 பூத்த கோங்கும் வேங்கையும் பொன்னி ணர்செய் கொன்றையுங்
காய்த்து நின்று கண்டெறூஉங் காமர் வல்லி மாதரார்
கூத்த றாத பள்ளியுங் கொற்ற மன்ன மங்கைய
ரேத்தல் சான்ற கோயிலு மிடைப்ப டுத்தி யன்றவே.

   (இ - ள்.) காய்த்து நின்று கண் தெறூஉம் காமர் வல்லி மாதரார் கூத்து அறாத பள்ளியும் - தம் கண்கள் இளைஞர் மெய்