| கேமசரியார் இலம்பகம் |
853 |
|
|
|
தக்கதுவோ சொலாய் - (நாம் ஒன்றி வாழும் இந்நாளிலே) தனியளாவது நினக்குத் தகுதியோ? கூறுவாய்.
|
|
(வி - ம்.) கனிகொள் காமம் - முதிர்ந்த காமம். எம்மியல்பினை நன்கு அறிந்துவைத்தும் இங்ஙனம் எம்மைத் தனிக்க விடுவது நினக்குத்தகுமோ என்றவாறு.
|
( 99 ) |
| 1511 |
கழலு நெஞ்சொடு கைவளை சோருமாற் | |
| |
சுழலுங் கண்களுஞ் சூடுறு பொன்னென | |
| |
வழலு மேனியு மாற்றலெ னையவோ | |
| |
நிழலி னீப்பருங் காதலு நீத்தியோ. | |
|
|
(இ - ள்.) ஐயவோ - ஐயனே!; கழலும் நெஞ்சொடு கைவளை சோரும் - போகின்ற நெஞ்சுடன் கைவளையும் போகா நின்றது; கண்களும் சுழலும் - கண்களும் பரவிப் பரவி நோக்கும்; சூடு உறு பொன் என மேனியும் அழலும் - உருகும் பொன்போல மெய்யும் அழல்கின்றது; ஆற்றலென் - ஆதலின் ஆற்றகில்லேன்; நிழலின் நீப்பருங் காதலும் நீத்தியோ - நிழலைப்போல நீத்தற்கரிய காதலையும் நீத்தனையோ?
|
|
(வி - ம்.) ஐயவோ : ஓ : இரக்கம். நீத்தியோ : ஓ : வினா.
|
( 100 ) |
| 1512 |
திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான் | |
| |
புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடை | |
| |
வருந்து மான்மட வாயெனும் வஞ்சநீ | |
| |
கரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ. | |
|
|
(இ - ள்.) திருந்தும் மல்லிகைத் தேம்கமழ் மாலை யான் புரிந்து சூடினும் - திருந்திய மல்லிகை மலர்களாலாகிய மணங்கமழும் மாலையை நான் விரும்பியணிந்தாலும்; மடவாய் பூங்கொடி நுண் இடை வருந்தும் எனும் வஞ்ச - 'பேதையே! மலர்க்கொடி யனைய நின் மெல்லிடை வருந்தும்' என்கிற வஞ்சனே!; யான் கரிந்து நையக் காண்டலும் வல்லையோ - யான் கருகி வருந்தக் கண்டிருத்தற்கும் நீ வல்லையோ?
|
|
(வி - ம்.) வல்லையோ : ஓ : வினா.
|
|
யான் கரிந்து நைதற்கு ஏதுவாகிற செயலைச் செய்யத் துணிந்த நீ முன்னர் மடவாய் நுண்ணிடை வருந்தும் என்றது வஞ்சகமொழியே என்பது அறிந்தேன் என்றவாறு. வல்லையோ - வன்மையுடையையோ.
|
( 101 ) |
| 1513 |
தொண்டை வாயிவ டொய்யில் வனமுலை | |
| |
கண்டு தேவர் கனிபவென் றேத்துவாய் | |
| |
வண்டு கூறிய வண்ண மறிந்திலேன் | |
| |
விண்டு தேன்றுளிக் கும்விரைத் தாரினாய். | |
|