| கேமசரியார் இலம்பகம் |
855 |
|
|
|
முலை வைத்த தடம் : யாம் பிறந்த இடமும் சிறிது கிடக்கவேண்டுமென்று முலைதான் அருள் பண்ணிவைத்த தடம். இது சீவகன் கூறிய கூற்றை இவள்கொண்டு கூறியது. 'எஞ்சுற்றம் என்றிரங்கா தாகமெல்லாங் கவர்ந்திருந்து' (சீவக. 2502) என்பர் மேலும். இருவரும் முன்னர் உறாதிருத்தல் இன்மையின், 'உறின்' எனவே முன்பு ஊடல் தீர்த்துக் கூடநினைக்கின் என்பது பெற்றாம். நின் வணக்கம் எல்லாம் வில்வணக்கம் போலத் தீங்கு தருவன வாயிற்றென்பது தோன்ற 'சிலைவித்தகனே' என்றாள். 'எவன்' என்னும் வினா 'என்' என நின்றது.
|
( 103 ) |
| 1515 |
கடனித் திலம்வைத் தகதிர்ம் முலையி | |
| |
னிடனெத் துணையத் துணையும் மெழுதி | |
| |
யுடனொத் துறைவா னுழைவா ரலனேன் | |
| |
மடனொத் துளதென் னுயிர்வாழ் வதுவே. | |
|
|
(இ - ள்.) கடல் நித்திலம் வைத்த கதிர்ம் முலையின் - கடல் முத்துமாலை புனைந்த ஒளிரும் முலைகளினாலே; இடன் எத்துணை அத்துணையும் எழுதி -தன் மார்பின் இடம் எவ்வளவு உண்டோ அவ்வளவும் யான் எழுத; உடன் ஒத்து உறைவான் உழைவாரலனேல் - என்னுடன் ஒத்து உறைகின்றவன் இனி என்னிடத்திலே வாரானாயின்; என் உயிர் வாழ்வது மடன் ஒத்து உளது - என் உயிர் வாழும் நிலைமை முற்பட்ட அறியாமையை ஒக்கும்
|
|
(வி - ம்.) எழுதி - எழுத. இனி, முலையெங்கும் தொய்யில் எழுதி உறைவான் என்றுமாம். முற்பட்ட அறியாமை - வண்டிற்குக் கூறியதை அறியாதிருந்தமை. ஒத்துளது: ஒரு சொல்.
|
|
கதிர்ம்முலை; விரிக்கும் வழி விரித்தல். இடன், மடன், என்பவற்றில் மகரத்திற்கு னகரம் போலி.
|
( 104 ) |
| 1516 |
பெறுமன் பினளென் பதுபே சினலா | |
| |
லறுமன் பினளென் றறைவா ரிலையா | |
| |
லிறுமென் பொடினைந் துநைவேற் கருளி | |
| |
நறுமென் கமழ்தா ரவனே நணுகாய். | |
|
|
(இ - ள்.) நறு மென்கமழ் தாரவனே - நறிய மெல்லிய மணங்கமழும் தாரினனே!; பெறும் அன்பினள் என்பது பேசின் அலால் -(நீ என்னுடன் உறைந்த நிலைகண்டு) இவள் நாடோறும் பெறும் அன்புடையாள் என்று (என் சுற்றத்தார்) பேசினதன்றி; அறும் அன்பினள் என்று அறைவார் இலை - தேயும் அன்பினள் என்று செப்பினாரில்லை; இறும் என்பொடு இனைந்து நைவேற்கு அருளி நணுகாய் - உருகும் என்போடு வருந்தி நையும் எனக்கு இன்னும் அருளி வருவாய்.
|
|
(வி - ம்.) பெறும் அன்பினள் அறும் அன்பினள் இத்தொடர்களை அன்பு பெற்றவள், அன்பு அற்றவள் என்று விகுதி பிரித்துக்கூட்டுக. நைவேன் + கு = நைவேற்கு இது தன்மையொருமை வினையாலணையும் பெயர். கு உருபு ஏற்றது.
|
( 105 ) |