| கேமசரியார் இலம்பகம் |
857 |
|
|
| 1519 |
புனமா மயிலே பொழிலே புனலே | |
| |
வனமார் வழையே வரையே திரையே | |
| |
யினமா மணிசூ ழெரிபூ ணவனைத் | |
| |
துனயான் பெறுகோ தொழுதே னுரையீர். | |
|
|
(இ - ள்.) புன மாமயிலே - தினைப்புனத்தில் வாழும் மயிலே!; பொழிலே - காவே!; புனலே - நீர் நிலையே!; வனம் ஆர் வழையே - அழகு பொருந்திய சுரபுன்னையே!; வரையே - மலையே! திரையே - கடலே!; தொழுதேன் - யான் நும்மை வணங்கினேன்; இன மாமணி சூழ் எரி பூணவனை யான் துனப் பெறுகோ - பலவகை மணிகள் சூழ்ந்த ஒளிவிடும் பூணவனான என் கணவனை யான் சேரப் பெறுவேனோ? உரையீர் - (பெறுவேனெனில்) அவனிருக்குமிடத்தைக் கூறுவீராக.
|
|
(வி - ம்.) மயில் ஆயிரங் கண்ணுடைத்துப் பொழில் நிழலுடைத்து புனல் தண்மையுடைத்து வழை நிழலுடைத்து வரை தன்மையுடைத்து திரை தண்மையுடைத்து ஆதலால் அருட்பண்புடையீர் தொழு தேன் உரையீர் என்றாள் என்க. துன - துன்ன.
|
( 108 ) |
| 1520 |
கொடுவெஞ் சிலைவாய்க் கணையிற் கொடிதாய் | |
| |
நடுநா ளிரவின் னவைதான் மிகுமா | |
| |
னெடுவெண் ணிலவின் னிமிர்தோ் பரியா | |
| |
தடுமால் வழிநின் றறனே யருளாய். | |
|
|
(இ - ள்.) கொடு வெஞ்சிலை வாய்க் கணையிற் கொடிதாய் - வளைந்த கொடிய வில்லிலிருந்து வரும் அம்பினுங் கொடியதாய்; இரவின் நடுநாள் நவைதான் மிகும் - நள்ளிரவு செய்யும் வருத்தந்தான் மிகா நின்றது; நெடு வெண்ணிலவின் நிமிர்தேர் பரியாது அடும் -நெடிய வெள்ளிய நிலவினையுடைய திங்கள் இரங்காமல் வருத்தும்; அறனே வழிநின்று அருளாய் - அறக்கடவுளே! இத்துணைத் துன்பத்திற்கும் எனக்குத் துணையாக நின்று அருள்வாயாக.
|
|
(வி - ம்.) 'நிலவின் நிமிர்தேர்' என்றார், வட்டத்தால் தேருருள்போலிருத்தலின்.
|
|
இரவின் நவை கணையின் நவையினுங் கொடிதாய் மிகும் என்க. தேர் : ஆகுபெயர். தேர்உருள்; இது திங்கள் வட்டத்திற்கு உவம ஆகுபெயர்.
|
|
திங்கள் உருவங் குளிர்ந்திருந்தும் உள்ளத்தில் அருளின்றி அடும் என்றவாறு.
|
|
இனி இவ்வாறு அடுதல் அறனோ என்றும் இவ்வழி நின்று தலைவனே நீயும் அருள்கின்றிலை என்றும் கூறினள் எனினுமாம்.
|
( 109 ) |