பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 858 

1521 கயலா லிவையென் றுகவிழ்ந் துகிடந்
தயலே னறியா மையுரைத் ததெலா
மியலா ததுவோ வினியேற் கினியீ
ருயலா வதுகண் மலர்கா ளுரையீர்.

   (இ - ள்.) கண் மலர்காள் - கண்மலர்களே!; இவை கயல் என்று - (அவன்) இக்கண்கள் கயலாயிருந்தன என்று நும்மைப் புகழும்போது; கவிழ்ந்து கிடந்து - (அதற்கு நீர்) அன்புற்றுக்கிடக்க; அயலேன் அறியாமை உரைத்ததெலாம் இயலாததுவோ - அயலேனாகிய நான் அறியாமல் நுமக்கு அவன் கூறியதெல்லாம் பிரிவையோ?; இனியேற்கு இனியீர் - இனியேனாகிய எனக்கு இனியராயிருந்தீர்!; உயலாவது உரையீர் - இனி உய்யலாம் வழியை உரைப்பீராக!

   (வி - ம்.) கிடந்து - கிடக்க : எச்சத்திரிபு; மெய்ம்மறக்கச் செய்து தன்னுடன் கூடியிராமையின், 'அயலேன்' என்றாள். உரைத்ததனை அவன் செய்த தொழில் என்று கொள்க; 'பொன்னுரைத்தது' என்றாற்போல. அது சொல்லிற்றெல்லாம் என்றாற் போலவும் நின்றது. இனியீர் இகழ்ச்சிக் குறிப்பு.

   கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யென்று நும்மிடம் நான் இனியேனாக இருந்தேன் என்னுங்கருத்துடன், 'இனியேற்கு' என்றாள். 'நும்மை அவன் 'புலால் நாறுகின்ற கய' லெனப் புகழப் போக்கு உடன்பட்டீர், யான், 'கண்மலர்காள்!' எனப் புகழாநின்றேன். 'உய்யும்வழி உரைப்பீர்' என்னுங் கருத்துடன், 'கண்மலர்காள்!' என்றாள்.

( 110 )
1522 நெறிநீர் வளையு நிழனித் திலமும்
பொறிநீ ரபுனைந் தெழுதிப் புகழும்
வெறிதா ரவனெவ் வழியே கினனீ
ரறிவீ ருரையீ ரமர்தோ ளிணைகாள்.

   (இ - ள்.) அமர் தோளிணைகாள் - அவன் நினைவை அமர்ந்த தோளிணைகளே!; நெறிநீர் வளையும் நிழல் நித்திலமும் - கடற் சங்கவளையையும் ஒளியையுடைய முத்துக்களையும்; பொறிநீரபுனைந்து - பொறித்தாற்போலும் தன்மையவாகப் புனைந்து; எழுதி - தோளிற் கரும்பையும் முலைகளில் தொய்யிற்கொடி முதலியவற்றையும் வரைந்து; புகழும் வெறிதாரவன் எவ்வழியேகினன் - நும்மைப் புகழ்ந்துரைக்கும் மணங்கமழ் மாலையான் எவ்வழிச் சென்றனன்?; நீர் அறிவீர் உரையீர் - (முயக்கத்தை நெகிழ்ந்து போகவிட்ட) நீர் அவன் போன இடமும் அறிவீர்; நும்மை யின்னும் யான் புகழ்தற்கு அவ் வழியைக் கூறுவீராக.

   (வி - ம்.) என்னிடத்தினுங் காட்டில் நும்பாற் பேரன்புடையன் என்பாள் எழுதிப் புகழும் தாரவன் என்றும், அங்ஙனமாகலின் அவன்