| கேமசரியார் இலம்பகம் |
859 |
|
|
|
நுமக்குணர்த்தாமல் பிரியான் ஆதலின் நீர் அறிவீர் என்றும் கூறினள் என்க.
|
( 111 ) |
| 1523 |
இழுதார் சுடர்வே லிளையா னகலத் | |
| |
துழுதீ ருடன்வெம் முலைகாள் வயிரத் | |
| |
தொழுவாய் விடையைத் தொடர்கிற் றிலிரென் | |
| |
றழுதா டடமா கவணங் கிழையே. | |
|
|
(இ - ள்.) வெம் முலைகாள் - கொடிய கொங்கைகளே!; இழுது ஆர் சுடர் வேல் இளையான் அகலத்து உழுதீர் - நெய்பூசிய ஒளி வேலவன் மார்பிலே உழுத நீர்; உடன் வயிரத் தொழுவாய் விடையைத் தொடர்கிற்றிலிர் என்று - அவ் வுழவின் பயனை முற்றப்பெற்று விடுமளவும் போகாதபடி அவனை வயிரத் தொழுவாய்ப் பிணித்திலீர், (நுமக்கும் அஃது அரிதாயிற்று; இனியான் செய்வது என்) என்று; அணங்கு இழை தடமாக அழுதாள் - அழகிய அணியாள் கண்ணீர் ஒரு குளமாகும்படி அழுதாள்.
|
|
(வி - ம்.) உழுதீர் விடையைத் தொடர்கிற்றிலீர் என்றும் ஒருபொருள் தோன்றிற்று.
|
|
விடை, காளை : சீவகன்; உவம ஆகுபெயர். விடை - விடுதல் (என்று ஒரு பொருள்,்)
|
|
தொழு - மாட்டுக்கொட்டில். கண்ணீர் தடமாக என ஒருசொல் பெய்க. அணங்கிழை : அன்மொழி; கேமசரி.
|
|
ஓரிடத்தும் பற்றின்றி யிருத்தலின் விடை; முறித்தற்காகாமையின் 'வயிரத்தொழு' என்றாள்.
|
( 112 ) |
| 1524 |
தகைவா டியதன் னிழல்கண் ணுகுநீர் | |
| |
வகைவா டிவருந் தியழு வதுகண் | |
| |
டகையே லமர்தோ ழியழே லவரோ | |
| |
பகையா பவரென் றனள்பான் மொழியே. | |
|
|
(இ - ள்.) பால்மொழி - இனிய மொழியாளாகிய கேமசரி; கண் உகுநீர் தகைவாடிய தன் நிழல் - தான் அழுத கண்ணீரிலே தோற்றிய தன் அழகு கெட்ட நிழல்; வகை வாடி வருந்தி அழுவது கண்டு - வகை வாடி வருந்தி அழுவதனைப் பார்த்து; அமர் தோழி அகையேல் அழேல் - எனக்கு அன்பமர்ந்த தோழியே! நீ வருந்தாதே! அழுவதுஞ் செய்யாதே!; அவர் பகையாபவரோ என்றனள் - அவர் இறுதியில் நமக்குப் பகை யாவரோ? என்று ஆற்றிவித்தனள்.
|
|
(வி - ம்.) அவரோ : ஓ : எதிர்மறை. நிழல், பளிங்கிற்றோன்றிய நிழலென்றலுமாம்.
|
|
பான்மொழி : அன்மொழி; கேமசரி. தகை - அழகு, வகை - தான் வருந்துமாறு. அகைதல் - வருந்துதல்.
|
( 113 ) |