நாமகள் இலம்பகம் |
86 |
|
யைக் காய்ந்து அவர் நெஞ்சிலே சுடும், அழகிய கொடியனைய மகளிரின் கூத்து நீங்காத அரங்கும்; கொற்றம் மன்ன மங்கையர் ஏத்தல் சான்ற கோயிலும் - வெற்றியாற் கொண்டுவரப்பட்ட பகைமன்னரின் மனைவியராய்க் காவலில் இருக்கும் மங்கையர் இறைவனை வழிபடும் திருக்கோயிலும்; பூத்த கோங்கும் வேங்கையும் பொன்இணர்செய் கொன்றையும் இடைப்படுத்து இயன்ற - மலர்ந்த கோங்கு, வேங்கை, பொன்போன்று கொத்தாக மலர்ந்த கொன்றை ஆகியவற்றை இடையிலே கொண்டு இயற்றப்பட்டிருந்தன.
|
|
(வி - ம்.) 'தமது கண்ணானது இளையோர் மெய்யை வெவ்விதாக்கி அவர் நெஞ்சிலே சுடும் மாதரார் ' எனச் சினைவினை முதலொடு முடிந்ததென்க.
|
|
இதனால் (கூத்தறாத பள்ளியும் கோயிலும் ஆகிய) இரண்டும் தம்மில் இடைவிட்டிருக்கு மென்றார்; மேலே, 'வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள் ' (சீவக. 220) என்ப.
|
|
ஈண்டு மன்ன மங்கையர் என்பதற்கு நச்சினார்க்கினியர் காவன் மகளிர் என்றார். அங்ஙனம் கூறியதன் கருத்தினை அவர் பட்டினப் பாலையில் ”கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலர் அணி மெழுக்கம்” எனபதற்குப் ”பகைவர் மனையோராய்ப் பிடித்து வந்த மகளிர் பலரும் நீருண்ணுந் துறையிலே சென்று முழுகி மெழுகும் மெழுக்கம்” என்று வரைந்த வுரையான் நன்கு விளங்கும். இதனால் பண்டைக்காலத்து மன்னர் பகைமன்னர் மகளிர்பால் நடந்து கொண்ட பெருந்தன்மை இனிது விளங்கும்.
|
|
காய்த்து : காய்ந்து; வலித்தல் விகாரம்.
|
( 125 ) |
155 |
கந்து மாம ணித்திரள் கடைந்து செம்பொ னீள்சுவர்ச் |
|
சந்து போழ்ந்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனா |
|
லிந்தி ரன்றி ருநக ருரிமை யோடு மிவ்வழி |
|
வந்தி ருந்த வண்ணமே யண்ணல் கோயில் வண்ணமே. |
|
(இ - ள்.) மாமணித் திரள் கந்து கடைந்து - மாமணித்திரளைத் தூணாகக் கடைதலானும்; செம்பொன் நீள்சுவர் சந்து போழ்ந்து இயற்றிய தட்டு வெண்பொனால் வேய்ந்து - பொன்னாலான சுவரிலே சந்தனத்தை அறுத்துச் செய்துவைத்த நெடுங்கையை வெள்ளியாலே வேய்தலானும்; அண்ணல் கோயில் வண்ணம் - இறைவன் கோயிலின் தன்மை; இந்திரன் திருநகர் உரிமையோடும் இவ்வழி வந்திருந்த வண்ணமே - இந்திரன் அரண்மனை உரிமை மகளிருடன் இவ்வழி வந்திருந்த தன்மையேயாய் இருந்தது
|
|
(வி - ம்.) ஏகாரம் : தேற்றம்.
|
( 126 ) |