| கேமசரியார் இலம்பகம் |
862 |
|
|
|
குடையானை; காமனே கண்ட போழ்தும் - காமனே பார்த்திட்டாலும் அக்காமனுக்கு; பண் அவாம் பவளச் செவ்வாய் - பண் விரும்பும் மொழியையுடைய பவளம் அனைய செவ்வாயையும்; படாமுலை - தளராத முலையையும்; பரவை அல்குல் - பரவிய அல்குலையும் உடைய; பெண் அவா நிற்கும் என்றால் - பெண்மையை அடைய விரும்பும் ஆசை உள்ளத்துலே நிற்கும் என்றால்; பிணை அனாட்கு உய்தல் உண்டோ - இவட்கும் பிழைத்தலுளதோ?
|
|
(வி - ம்.) 'பெண்ணவாய்' என்பதூஉம் பாடம். காமனே : ஏ : பிரிநிலை.
|
|
அக்காமன் பெண்மைத்தன்மை எய்தி இவனை நுகர்தற்கு விரும்புவன்; அத்தகைய பேரழகினோனை எய்திய இவள் பிரிவினை எங்ஙனம் ஆற்றுவள் என்று இரங்கியபடியாம்.
|
|
”ஆடவர் பெண்மையை அவாவு தோளினாய்” என்பது கம்பராமாயணம்: (தாடகை - 24).
|
( 117 ) |
| 1529 |
கடத்திடைக் கவளந் தேனெய் | |
| |
கனியைத்தோய்த் தினிய துற்றத் | |
| |
தடக்கையாற் கொடுத்துப் புல்லுந் | |
| |
தவழ்மதக் களிறு நீங்கின் | |
| |
மடப்பிடிக் குய்த லுண்டோ | |
| |
வாலடிக் குஞ்சி சூட்டுங் | |
| |
கொடைக்கையான் பிரிந்த பின்றைக் | |
| |
கோதையாட் குய்த லுண்டோ. | |
|
|
(இ - ள்.) தேன் நெய் கனியைத் தோய்த்து இனிய கவளம் துற்ற - தேனாகிய நெய்யைக் கனியில் தோய்த்தலாலே இனியவாகிய கவளத்தைத் தின்னும்படி; தடக்கையால் கொடுத்துப் புல்லும் தவழ் மதக் களிறு நீங்கின் - பெரிய கையினால் ஊட்டித் தழுவும் மதம் பொருந்திய களிறு நீங்கினால்; கடத்திடை மடப்பிடிக்கு உய்தல் உண்டோ - காட்டிலே இளம்பிடிக்கு வாழ்வு உண்டோ?; (அதுபோல) வாலடிக் குஞ்சி சூட்டும் கொடைக் கையான் பிரிந்த பின்றை - இவளுடைய தூய அடியிலே தன் முடியை வைத்து ஊடல் தீர்த்துக் கூடும் வண்கையான் நீங்கின பிறகு; கோதையாட்கு உய்தல் உண்டோ - கோதையை உடைய இவளுக்கு வாழும் இயல்பு உண்டோ?
|
|
(வி - ம்.) கடம் - காடு. தேனெய் - பண்புத் தொகை. இனிய, பல வறிசொல். துற்றல் - உண்ணல். மதந்தவழ் களிறு என மாறுக. குஞ்சி - குடுமி, தலைமயிர். ஊடலை நீக்குவதற்குக் கணவன் மனைவியின் காலில் வீழ்ந்து வணங்கினான் என்று கூறுவது இலக்கிய மரபு.
|
( 118 ) |