பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 863 

1530 முயங்கினான் சொன்ன வண்டாய்
  முகிழ்முலைத் தெய்வஞ் சேர
வுயங்குவா ளுணர்ந்து கேள்வற்
  கூனமும் பிரிவு மஞ்சி
யியங்குவா னின்ற வாவி
  தாங்கின ளென்ப போலும்
வயங்குபொன் னீன்ற நீல
  மாமணி முலையி னாளே.

   (இ - ள்.) முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ்முலைத் தெய்வம் சேர - (தன்னைத் தழுவிய) கணவன் கூறிய வண்டின் வடிவாய் முகிழ்த்த முலையை உடைய இல்லுறை தெய்வம் அவள் எதிரில் வந்த அளவிலே; உயங்குவாள் - வருந்திக்கொண்டிருந்த; வயங்கு பொன் ஈன்ற நீல மாமணி முலையினாள் - விளங்கு பொன் அனைய தேமலையுடைய, நீலநிற மணிக் கண்களையுடைய முலையினாள்; உணர்ந்து - (வண்டை நோக்கித் தன் கணவன் கூறியதை) உணர்ந்து; கேள்வற்கு ஊனமும் பிரிவும் அஞ்சி - தன் கணவனுக்குப் பழியும் இறந்துபடுதலும் நேரும் என அஞ்சி; இயங்குவான் நின்ற ஆவி தாங்கினள் - போதற்கு ஒருப்பட்டு நின்ற உயிரைப் போகாமல் தாங்கினாள்.

   (வி - ம்.) என்ப, போலும் : அசைகள்.

   அவன், 'துணைவண்டு துஞ்சில் நீயும் துஞ்சுவை' என்றதனை நினைத்து ஆற்றினாள். அவள் நிலைகண்டு இரங்கிய தெய்வம், 'நின் இறந்துபாடு நின் கேள்வதற்கு ஊனமும் பிரிவுமா'மென்று கூறுவதுபோல வண்டாய் வந்து தன் தெய்வத்தன்மையால் அவன் கூறியதை நினைப்பித்தது.

( 119 )
1531 வங்சவாய்க் காமன் சொன்ன
  மணிநிற வண்டு காணீர்
துஞ்சுவேன் றுயரந் தீரத்
  தொழுதகு தெய்வ மாவீர்
மஞ்சுதோய் செம்பொன் மாடத்
  தென்மனை தன்னு ளென்றாள்
பஞ்சிமேன் மிதிக்கும் போதும்
  பனிக்குஞ்சீ றடியி னாளே.

   (இ - ள்.) பஞ்சிமேல் மிதிக்கும்போதும் பனிக்கும் சீறடியினாள் - பஞ்சியின்மேல் மிதித்தாலும் வருந்துகின்ற சிற்றடியாள்; வஞ்சவாய்க் காமன் சொன்ன மணிநிற வண்டுகாள் - வஞ்சிக்கும் வாயையுடைய காமன் கூறிய நீலநிற வண்டுகளே! -