| கேமசரியார் இலம்பகம் |
864 |
|
|
|
நீர் - நீவிர்; துஞ்சுவேன் துயரம் தீர - இறந்துபடுவேனது துயரம். நீங்கும்படி; மஞ்சு தோய் செம் பொன் மாடத்து - முகில் படியும் பொன்மாடத்திலே; என் மனை தன்னுள்; - என் மனையிலே; தொழுதகு தெய்வம் ஆவீர் - தொழத்தகுந்த தெய்வமாவீர்கள்.
|
|
(வி - ம்.) துணை வண்டையும் கருத்துட் கொண்டு, 'வண்டுகாள்' என்றாள். நும்மால் இறந்துபாடு நீங்கினேன். இனி, இரங்காத நும்மைக் கண்டு, இரக்கமுந் தீரும்படி இல்லுறை தெய்வமாய் இருப்பீர் என்றாள்; 'இருக்குமே யிரங்கலின்றாய்' (சீவக. 1502) என்றானாதலின், இது தெய்வத்தன்மையாற் கூறுவித்தது தெய்வம்.
|
( 120 ) |
| 1532 |
நொந்தெடுக் கலாது வீங்கும் | |
| |
வனமுலை நுசுப்பிற் றேய்ந்தோர் | |
| |
பந்தெடுக் கலாத நங்கை | |
| |
பால்கடை வெண்ணெய்ப் பாவை | |
| |
வெந்துடன் வெயிலுற் றாங்கு | |
| |
மெலிந்துக விளங்கும் வெள்ளி | |
| |
வந்துவா னிட்ட சுட்டி | |
| |
வனப்பொடு முளைத்த தன்றே. | |
|
|
(இ - ள்.) வீங்கும் வனமுலை எடுக்கலாது நொந்து தேய்ந்த நுசுப்பின் - பருக்கும் தன் அழகிய முலையைச் சுமக்கமுடியாமல் வருந்தித் தேய்ந்த இடையினாலே; ஓர் பந்து எடுக்கலாத நங்கை - ஒரு பந்தையும் ஏந்தமுடியாத கேமசரி; பால் கடை வெண்ணெய்ப் பாவை வெயில் உற்று உடன் வெந்தாங்கு - பால் கடைந்தெடுத்த வெண்ணெயால் ஆன பாவை வெயிலில் உற்று உடனே வெந்தாற்போல; மெலிந்து உக - மெலிந்து கெடாநிற்க; வான் இட்ட சுட்டி வனப்பொடு - வானுக்கு இட்ட சுட்டி போன்ற அழகுடன்; வெள்ளி வந்து முளைத்தது - வெள்ளி வந்து தோன்றியது.
|
|
(வி - ம்.) இனி, நுசுப்புப்போல் தேய்ந்து என்றுமாம். 'தேய்ந்த நுசுப்பாற் பந்தெடுக்கலாத நங்கை'யென அவளியல்பு கூறினார். தேய்ந்த ஓர் : தேய்ந்தோர் : தொகுத்தல் விகாரம். இனி 'தேய்ந்து' எனப் பிரித்து, 'வருந்தும்' என ஒரு சொல் வருவித்து முடிப்பர் நச்சினார்க்கினியர்,
|
|
இறந்துபாடு நீங்கி வருந்தினாள் என்க.
|
( 121 ) |
| 1533 |
எரிநுதி யுற்ற மாவி னிளந்தளிர் போன்று மாழ்கிப் | |
| |
புரிநரம் பிசையிற் றள்ளிப் புன்கணுற் றழுத லாலே | |
| |
யரிகுரற் கொண்ட பூச லகத்தவர்க் கிசைப்ப வீண்டித் | |
| |
திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சோ்ந்து சொன்னாள். | |
|