| கேமசரியார் இலம்பகம் |
865 |
|
|
|
(இ - ள்.) எரி நுதி உற்ற மாவின் இளந்தளிர் போன்று மாழ்கி - எரியின் நுனியிற் பொருந்திய மாவின் இளந்தளிர்போல மயங்கி; புரிநரம்பு இசையின் தள்ளிப் புன்கண் உற்று அழுதலாலே - தன் மிடற்றை முறுக்கிய நரம்போசையினின்றும் நீக்கி வருத்தம் உற்று அழுததனால்; அரிகுரல் கொண்ட பூசல் அகத்தவர்க்கு இசைப்ப - அரித்தெழும் குரல் கொண்ட ஓசை இல்லிலுள்ளார்க்கு அறிவிக்க; ஈண்டி - அவர்கள் திரண்டு வந்தபோது; திருவிரி கோதை நற்றாய் நிப்புதி சேர்ந்து சொன்னாள் - அழகு மலர்ந்த மாலையையுடைய கேமசரியின் நற்றாயான நிப்புதி ஆங்கு வந்து கூறினாள்.
|
|
(வி - ம்.) யாழ் நரம்பிசை போன்று அவட்கியல்பாக அமைந்துள்ள குரல் துன்பத்தால் மாறி அரிகுரல் ஆயிற்றென்பது கருத்து. அரிகுரல் - அரித்தெழும் குரல். 'அரிக்கூ டின்னியம்' என்றார் மதுரைக் காஞ்சியினும், (612)
|
|
ஈண்டி என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாக்குக.
|
( 122 ) |
| 1534 |
விழுத்திணைப் பிறந்து வெய்ய | |
| |
வேட்கைவே ரரிந்து மெய்ந்நின் | |
| |
றிழுக்கமொன் றானு மின்றி | |
| |
யெய்திய தவத்தின் வந்து | |
| |
வழுக்குத லின்றி விண்ணோன் | |
| |
வச்சிர நுதியி னிட்ட | |
| |
வெழுத்தனான் றந்த வின்ப | |
| |
மின்னுநீ பெறுதி யென்றாள் | |
|
|
(இ - ள்.) விழுத்திணைப் பிறந்து - உயர்ந்த குடியிலே பிறந்து; வெய்ய வேட்கை வேர் அரிந்து - கொடிய பிறப்பின் வேரை அறுத்து; மெய்ந் நின்று - உண்மை நெறியிலே நின்று; இழுக்கம் ஒன்றானும் இன்றி - தவறு எவ்வாற்றானும் இல்லாமல்; எய்திய தவத்தின் வந்து - நமக்குக் கிடைத்த தவப்பயனாக வந்து; விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட எழுத்தனான் - அயன் வச்சிரத்தின் நுனியாலே இட்ட எழுத்தைப் போன்றவன்; தந்த இன்பம் - நினக் களித்த இன்பத்தை; வழுக்குதல் இன்றி நீ இன்னும் பெறுதி என்றாள் - தவறுதல் இல்லாமல் நீ மேலும் எய்துவை என்றாள்.
|
|
(வி - ம்.) விழுத்திணை - உயர்ந்த குடி. வேட்கை, ஈண்டு ஆகுபெயராற் பிறப்பினை உணர்த்தி நின்றது.
|
|
வச்சிரத்தின் நுனியிற் பொறிக்கப்பட்ட எழுத்து அழியாமை பற்றி வச்சிர நுதியின் இட்ட எழுத்தன்னான் என்றாள் எனினுமாம்.
|