| கேமசரியார் இலம்பகம் |
867 |
|
|
|
(இ - ள்.) எரிதலைக்கொண்ட காமத்து இன்பம் நீர்ப்புள்ளி அற்று - தீயைத் தன்னிடத்தே கொண்ட காமத்திலே புணர்ச்சி யாற்பெறும் இன்பம் நீர்த் துளியை ஒத்திருக்கும்; பிரிவின்கண் பிறந்த துன்பம் பெருங்கடல் அனையது ஒன்று - பிரிவாற் பிறந்த துன்பம் பெரிய கடலை ஒப்பதொன்றாகும்; உருகி நைந்து உடம்பு நீங்கின் இம்மையோடு உம்மை இன்றி இருதலைப் பயனும் எய்தார் - (ஆதலின்) இப் பிரிவாலே உருகி வருந்தி உடம்பு நீங்குமாயின் இம்மையினும் மறுமையினும் செய்து கொள்ளும் நன்மையும் இல்லாமல் இரண்டிடத்தும் பெறும் பயனையும் பெறார்; என்று யாம் கேட்டும் அன்றே - என்று உணர்ந்தார் கூறக்கேட்டிருப்போம் அல்லவோ? (ஆதலின் பிரிவால் வருந்தாதே.)
|
|
(வி - ம்.) நீர்ப்புள்ளி இன்பத்தின் சிறுமைக்கும் பெருங்கடல் துன்பத்தின் பெருமைக்கும் உவமையாகக் கூறப்பட்டன.
|
|
உருகு நைதல் காரணமாக இறந்துபடின் என்றவாறு.
|
|
இருதலை - அவ்விம்மை மறுமையாகிய ஈரிடத்தும். கேட்டும் : தன்மைப் பன்மை வினைமுற்று. ஆதலின் வருந்தாதேகொள் என்பது குறிப்பு.
|
( 125 ) |
| 1537 |
மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்ப | |
| |
மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு | |
| |
மின்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லா | |
| |
யன்னதால் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள். | |
|
|
(இ - ள்.) இன் இசை இரங்கும் நல்யாழ் இளியினும் இனிய சொல்லாய் - இனிய இசையொலிக்கு நல்ல யாழினது இளியென்னும் நரம்பினும் இனிய மொழியினாய்!; மானிடர் இளமை மன்னும் நீர் மொக்குள் ஒக்கும் - மக்களின் இளமை மிகவும் நீர்க்குமிழியை ஒக்கும்; இன்பம் மின்னின் ஒத்து இறக்கும் - அவர் இன்பமோ மின்னைப்போன்று தோன்றி நீங்கும்; செல்வம் வெயிலுறு பனியின் நீங்கும் - அவர்களுடைய செல்வமும் வெயிலைக் கண்ட பனிபோல் அழியும்.; வினையின் ஆக்கம் அன்னது - (ஆதலின்) தீவினையின் ஆக்கம் அவ்வாறு வலியுடைத்து; அழுங்குவது என்னை என்றாள் - இதற்கு வருந்திப் பெறுவது என்னை யென்று ஆற்றுவித்தாள்.
|
|
(வி - ம்.) மன்னும் - மிகவும் என்பர் நச்சினார்க்கினியர். நீர் மன்னும் மொக்குள் என மாறி நீரிடத்தே நிலைபெற்ற மொக்குள் எனினுமாம்.
|
|
அன்னது - அத்தகைய வன்மையுடையது. நிப்புதி தன் முதுமைக்கேற்றன கூறி ஆற்றுவித்தல் அறிந்தின்புறுக. இளி - யாழிடத்து ஒரு நரம்பு.
|
( 126 ) |