பக்கம் எண் :

கேமசரியார் இலம்பகம் 869 

   (வி - ம்.) வண்டினுக்குரைத்த மாற்றம் என்றது, ”துணை வண்டு துஞ்சின் நீயுந் துஞ்சுவை” என்றதனை (91). பாசம் - கயிறு. பாசம் என்றதற்கேற்ப, ஆக்கப்பட்ட ஆவி என்றதற்குக் கட்டப்பட்ட உயிர் என்னலே சிறப்பு. தூ - தூய.

( 128 )
1540 பையர விழுங்கப் பட்ட
  பசுங்கதிர் மதிய மொத்து
மெய்யெரி துயரின் மூழ்க
  விதிர்விதிர்த் துருகி நையு
மையிருங் குழலி னாடன்
  மைந்தனை வலையிற் சூழ்ந்து
கையரிக் கொண்டுங் காணாள்
  காளையுங் காலிற் சென்றான்.

   (இ - ள்.) பையர விழுங்கப்ட்ட பசுங்கதிர் மதியம் ஒத்து - படத்தையுடைய பாம்பினால் விழுங்கப்பட்ட பைங்கதிரையுடைய திங்களைப்போன்று பசந்து; மெய் எரி துயரின் மூழ்க விதிர்விதிர்த்து உருகி நையும் - உடம்பு எரியுந் துயரத்திலே மூழ்கும்படி நடுநடுங்கி நெஞ்சுருகி வருந்துகின்ற; மை இருங் குழலினாள் தன் மைந்தனை - கரிய நீண்ட குழலாள் தன் கணவனை; வலையின் சூழ்ந்து கையரிக் கொண்டும் காணாள் - வலைபோலே சூழ்ந்துகொண்டு அரித்தல் கொண்டு தேடியும் கண்டிலள்; காளையும் காலின் சென்றான் - அவனும் காலாலே நடந்து போனான்.

   (வி - ம்.) குழலினாள் : கேமசரி. தன் மைந்தனை என்றது தன் கணவனை என்றவாறு.

   'நினக்கிவன் மகனாத் தோன்றியதூஉம்' என மணிமேகலையில் (21 : 29) கணவனை மகன் எனலுங் காண்க.

   அரா : அர என ஆனத விகாரம். காலின் - காற்றுப்போலென்றுமாம்.

( 129 )
1541 காழகச் சேற்றுட் டீம்பால்
  கதிர்மணிக் குடத்தி னேந்தி
வீழ்தரச் சொரிவ தேபோல்
  விளங்கொளித் திங்கட் புத்தேள்
சூழிருட் டொழுதி மூழ்கத்
  தீங்கதிர் சொரிந்து நல்லார்
மாழைகொண் முகத்திற் றோன்றி
  வளைகடன் முளைத்த தன்றே.